பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஒருவரின் வாழ்வை அழகுறச் சித்தரிப்பதில் கன்னடச் சிறு கதைகளில் சிறந்தது எனற உயர்நிலையைத் தேடித் தந்துள்ளது "வசுமதி' போன்ற நாட்டுப்பற்றை ஊட்ட வல்ல கதைகளையும் நிஜகல் ராணி' முதலான வரலாற்றுக் கதைகளையும உருவாக்கிய மாஸ்தி 'மங்கம்மா' எனற படைப்பில் நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையை அழகுறச் சித்திரிககத் தவறவிலலை இவ்வகையில் பேட்டி கேரி, ஆனந்தா, கோரூா, கோபாலகிருஷ்ணராவ் முதலானோர் சிறந்து விளங்குகின்றனர் இவரது கதை சொல்லும் போக்கிலிருந்து சற்று மாறு ப்ட்ட நிலையில் சிறுகதைகளைப் படைத்து மக்களிடையே செல்வாக்குப் பெற்றுவரும் இக்காலச் சிறுகதைப் படைப் பாளர்களுள் யஷ்வந்த் சித்தாலா, யூ ஆர் ஆனந்த மூர்த்தி, எஸ் கே தேசாப், லங்கேஷ், கே. சதாசிவம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். புகழ்பெற்ற கன்னட புதினப் படைப்பாளர்களான குவெம்பு, பேந்தரே, நரசிம்மாச்சார் போனறோரும் சிறு கதைத் துறைக்குப் போதிய அளவு காணிக்கை செலுத்தி யுள்ளனர் ஆண் எழுத்தாளர்களைப் போலவே கன்னட சிறு கதைத் துறைக்குப் பெண் எழுத்தாளர்களும் பெருந் தொண்டாற்றியுள்ளனர் அவர்களுள் திருமதி கெளரம்மா ஹெச் வி சாவித்ரம்மா, ஸாமலாதேவி, ஜெயலட்சுமி, தேவாங்கனா போனறோரைக் குறிப்பிடலாம் இவர் களுள் திருமதி கெளரம்மா தன சிறுகதைப் படைப்புகளில் அழகும் நுட்பமும் மிளிர பெண்களின் உளப்போக்கைச் சித்தரிப்பதில் மிகச் சிறந்து விளங்குகிறார் கன்னட இலக்கியத்தில் புதினத் துறையின் வளர்ச்சி