பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 உறவு ஆகும் ஆழ்ந்த தமிழறிவு பெற தமிழ் இலக்கியல் களையெல்லாம் தானாகவே படிக்க முனைந்து அதில் ஒரளவு வெறறியும் பெற்றார் புற நானூற்றைப் படித்த இவர் அதன் உயர்வை கேரள மக்களும் உணர்ந்து அனுபவித்து மகிழ வேண்டும் என எண்ணி அதன் பல பாடல்களை பாடல் வடிவிலேயே மலையாளத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார். பின் னர், திருக்குறளை மலையாளத்தில மொழி பெயர்த்தார். பின்னர், இவரது பார்வை கம்ப ராமாயணத்தின்’ பால் திரும்பியது. அதன் இலக்கியச் சுவையில் திளைத்து இன்புறற டாக்டர் தாயர் மூலச் சுவை சிறிதும் குன்றா வண்ணம் கவின் மலையாளத்தில் மொழி பெயர்த்து சென்னைப் பல்கலைக் கழக வெளியீடாக் வெளியிட்டுள் ளார். சங்க இலக்கியச் செல்வங்களையெல்லாம் மலை யாளத்தில் பெயர்க்கத் துடித்த டாக்டர் தாயர் அவர்கள் சிலப்பதிகாரத்தை சேர நாடாகிய கேரளத்தின் இலக்கியச் செல்வமாகவே எண்ணி இறும்பூதெய்தினார். இவர் இதுவரை மூன்று நாவல்களையும் எழுதியுள் ளார். அவற்றுள் சிறந்ததாகக் கருதப்படும் அய்யப்பன்' நாவல் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இவர் கதகளி நாடக நூல் ஒன்றையும் சிறுகதைத் தொகுப்பு நூல் ஒனறையும் கட்டுரைத் தொகுப்புகள் பலவற்றையும் வெளியிட்டுள் ளார். கிரேக்க, வடமொழி, ஆங்கில நாடகங்கள் பல வற்றை பெயர்த்துள்ள இவர் என் சரிதம் தமிழ் நூலை யும் மலையாளத்தில் பெயர்த்துள்ளார். மலையாளத்தை தமிழ்த்தாய் பெற்றெடுத்த சேய் மொழியாகக் கருதிய டாக்டர் தாயர் இரு மொழி உறவுக்கு இடையறாது உழைப்பதைத் தன் வாழ்க்கையின் உயரிய குறிக்கோளாகக் கொண்டு உழைத்தவராவார். மலையாளம், தமிழ் ஆகிய இரு மொழி இலக்கிய வர லாற்றிலும் எதிர்காலத்தில் இவர் பெயர் சிறப்பாக இடம் பெற்றிருப்பதில் வியப்பில்லை.