பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 கவிதை, சிறுகதை வளர்ச்சிக்குச் சற்றும் பின்தங்கிய தில்லை அதிலும கடந்த இருபது ஆண்டுகளில் புதினத் துறையின் வளர்ச்சி வியப்பூட்டுவதாக அமைந்துள்ளது கன்னட புதினப் படைப்பாளர்களுள் சிவராம காரந்த் அவர்கட்கே முதலிடம் வழங்கப் பெற வேண்டும் சிறிதும் பெரிதுமாக சுமார் 20-க்கு மேறபட்ட புதினங் களைப் படைததளித்த பெருமை அவருககுணடு இவரது படைப்புகள் அனைததும் சமுதாயச் சூழலை மையமாகக் கொண்ட சமூக நாவல்களாகும் சிவராம காரந்த் சில கட்டு திட்டமான கொள்கை களை மையமாக வைத்துத் தன் இலக்கியப் பணியை ஆற்றி வருகிறார் என்பதை இங்கு நினைவு கூற வேண டும மற்ற படைப்பாளர்களைப் போன்று வானத்தை அண்ணாந்து பார்த்து கற்பனை உருவங்களுக்கு எழுத் துரு கொடுப்பவரல்ல காரந்த் தான் கணடவைகளையும் உணர்ந்தவைகளையுமே இணைதது கற்பனை மெருகூட்டி கதை புனைகிறார் கண்டுணர்ந்தவறறையே எழுத வேண்டும், சொந்த அனுபவத்தின எதிரொலிகளாகவே தன் எழுத்து அமைய வேண்டும்" என்பதில் அழுததமான கொள்கையுள்ள காரந்த் தன் கொள்கை வழிப்படியே படைப்பிலக்கியங்கள் மூலமாக இமாலய வெற்றி பெற் றுள்ளார் எனக் கூறினால் அஃது மிகையன்று மண்ணின் மணம் பூரணமாக வீசும் வண்ணம் இவர் மரளி மண னிகெ’, ‘பெட்டத ஜீவ", "குடியர கூசு போன்ற புதினங் களைப் படைத்தளிததுள்ளார் மரளி மண்ணிகெ புதி னம் மூன்று தலைமுறையைப் பற்றிய கதையாகும. கடந்த நூறு ஆண்டுகளில் இந்திய மக்க்ளின் வாழ் வில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களை கர்நாடக மண னுக்கேயுரிய தன்மையில் விவரிக்கிறது. இப்புதினம் விடு தலைப் போராட்ட காலத்தில் சுயநல வாதிகளால்