பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நாட்டுப்பற்று மிக்க தொண்டர்கள் எப்படியெல்லாம் துன்புற நேர்ந்தது என்பதை அவுதாரியத உருளல்லி' (தூக்கு மரம்) என்ற புதினததில் சிறப்பாகச் சித்தரித் துள்ளார், மனிதனின் உள்மன வேறுபாடுகளை நுண் மாண் நுழைபுலங்கொண்டு எழுத்துருவில் வடித்துத் தரு வதில் கனனட படைப்பிலக்கியத் துறையின் முடிசூடா மனனராகக் காரந்த் விளங்குகிறாா எனினும் பொருத்தும் கன்னட மொழியில் ஐம்பதுக்கு மேற்பட்ட புதினங் களைப் படைத்தளித்துச் செனற பெருமை அ.ந.கிருஷ்ண அவர்களைச் சாரும் இவரது புதினங்கள் பலவற்றில் வரும் பாத்திரங்கள் கலையுலகைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் இப்புதினப் படைப்புகளும் கலையம்சம் மிக்கவைகளாகவேயுள்ளன எனலாம் சமூகப் பிரச்சினை களையும் மையமாகக் கொண்டு இவரது படைப்புகள் நடைபோடுகின்றன. த.ாா.சு அவர்கள் பெண்ணுலகப் பிரச்சினைகளை, குறிப்பாக விலைமாதர் வாழ்க்கை, குடும்பப் பிரச்சினை கள், பெண்ணுரிமை இவற்றை மையமாகக் கொண்டு தனது படைப்புகளை உருவாக்கியுள்ளார் அனாதைக் குழநதைகளின் சோக வாழவைச் சித்தரிக்கும புருஷா வதாரா புதினம் கன்னட இலக்கிய உலகில் புதுமையாக எழுந்த படைப்பாகும சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர் களைச் சுற்றி தனது சிந்தனையைச் செலுததிப் படைப்பு களை உருவாக்கும் கட்டிமனியின் எழுதுகோல், ஏழை களைப் புழுவென நெளிய வைக்கும் வறுமை, அவர்தம் முன்னேற்றத்துக்குத் தடைக்கல்லாக இருந்துவரும் சாதித் துலம், காமம், வரட்டு கர்வம், பொருளாதாரப் போராட்டம் போன்றவற்றை பிரததியட்சப் போக்கில் உணர்த்தும் வகையில் படைப்புகளை உருவாக்கியுள்ளது