பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 நிரஞ்சனர் மற்றுமொரு எழுத்தாற்றல் மிக்க கன்னட புதினப் படைப்பாளராவார். இவர் "கல்யாண சுவாமி' போனற சரிததிர நாவல்கள் உட்பட பல நாவல்களை எழுதியவர். இவரது படைப்புகளில் சமூக விழிப்புணர் வைத் தூண்டும் வகையில் பாத்திரப் படைப்பும் கதைக் கருவும அமைநதிருப்பது குறிப்பிடத் தக்கது. ரங்கம்ன வடாரம்' என்ற மற்றொரு புதினமும் குறிப்பிடத்தக்க படைப்பாகும் மற்றும் எம்.வி. சீத்தாராமையா, திரிவேணி போன்றவர்களும் மிகச் சிறந்த புதினப் படைப்புகளை உருவாக்கி கனனட மொழியைச் செழுமைப்படுத்தியுள்ள னர். குவெம்பு எழுதிய இரு நாவல்களும் கவிதை வயப் பட்ட படைப்புகளைப்போல உள்ளன. ராவ்பகதூரின் "கிராமயானா புதினமும் எஸ்.எல். பைரப்பா எழுதிய 'வம்ச வ்ருக்ஷா புதினமும் கன்னட இலக்கியத்தில் அண்மைக் காலத்தில எழுந்த அருமையான படைப்பு களாகும். அண்மைக் காலத்தில் கவிதைத் துறையில் 'புதுக் கவிதை' என்ற இலக்கியப் புதுமைப் போக்கு எழுந்தது போல் புதினத துறையிலும் ஒரு புதிய போக்கு காலூன்றி யுள்ளது. அப்புதிய போக்கிலும் அருமையான படைப்பு கள் வெளிவந்து கொணடிருக்கின்றன. அவற்றுள் எஸ்.கே தேசாய் எழுதிய முக்தி ஆனந்த மூர்ததியின 'சமஸ்காரா, ஏ.கே. ராமானுஜததின ஹாலடி மினு, கிரியின் கதி ஸ்திதி', லங்கேஷின 'பிர்க்கு". டாக்டர் மொக்காஸியின் கங்கம்மா கங்காமயி', யஷ்வந்த் சித்தா லின் மூரு தாரி'யும் குறிப்பிடத்தக்க புதினப் படைப்பு களாகும். இவற்றில் புதிய உத்திகளையும் கதை சொல் லும் போக்கில புதிய பாணியையும் கையாண்டு புதினத் துறையின் வளமான வளர்ச்சிக்கு வழி திறந்திருக்கிறார் கள். 2