பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 வனைத் தன் வலைக்குள் சிக்க வைத்து சிறப்படைய விரும்பிய படித்த பெண ஒருத்தியை மையமாகக் கொண்ட 'அம்மாவர கனட' எனற நாடகமும் விலைமகளின பிரச்சினையை விளக்கும் ஸுளெ' என்ற நாடகமும் சிறந்து விளங்குவனவாகும். இவருக்கு அடுத்தபடியாக கணனட நாடக உலகில் சிறப்புற்று விளங்குபவர் ஆத்ய ரங்காச்சாரியா ஆவார். பழைமைப் போக்கைக் கடுமையாக விமர்சிககும் வகையில் இவர் தமது சமூக நாடகங்களை உருவாக்கியுளளார். குடும்பததிலும் வெளி உலகிலும் பேரும் பெருமையும் பெற, உள்ளொன்றும் புறமொன்றுமாக மாறுபடட போககில் வாழும் தொட்டராயன், பழமைப் பிடியி லிருந்து சிறிதும் மாறுபடாத வேணக்ச என்ற இரு பாத திரங்களைக் கொண்டு சமூகச் சீர்கேடடை விமர்சிக்க எழுந்த 'ஹரிஜனவார' எனற நாடகம், காட்சியமைப்பு, துணுககமாகப் படைக்கப்பட்டிருக்கும் பா த் தி ர ப் படைப்பு ஆகியவற்றோடு அமைந்த உயர்ந்த கலைப் படைப்பாகும. சோகச் சக்கர', 'ஜீவன ஜோகாலி" போறை நாடகங்களில், விடுதலையைத தவறான போக் கில் பயன்படுத்தி சுயநல வேட்டையாடுவோரையும அதி காரத்தைத் தவறான வழியில் பயனபடுத்தி நேர்மையைக் கால்டியில போட்டு மிதிப்போரிடையே வருநதி நிற்கும் தேசத தொண்டாகளின மனநிலையையும் அற்புதமாகச் சிததரிக்கிறார். புதினத துறையைப் போன்றே கன்னட நாடகத் துறைக்கும் பெருந் தொண்டாற்றுபவர் சிவராம காரந்த அவர்கள், இறைவன் பெயராலும சமயத்தின் பெயராலும் நடைபெறும் பலவித அநீதிகளைத் தோலுரித்துக்காட்டும் “கர்ப்பகுடி' நாடகம் இவரது பெரிய நாடகங்களுள் சிறந்ததாகும். ஓரங்க நாடகத் துறையும் இவரது கை வண்ணததால் பொலிவு பெற்றுள்ளது.