பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 அடிக்கடி கோர்ட்டுக்குப் போன அலுப்புடன் போலும், ஹைகோர்ட் கட்டிடத்தின் மேல விழுந்த துளி, பக்கத்தில் இருந்த மூளி ஏரியில் விழுநது மறைந்தது. சட்டசபை உச்சியில் விழுந்த துளி ஆகாயததைப் பார்த்தது. இனி போதும் மழை-எனறு கட்டளை இட்டது. அததுடன் மழை நின்றது. அதுதான் பட்டணத்தில் பெய்த மழை அதாவது ஐதராபாத்தில் பெய்த மழை’ மழைத்துளியை ஆதாரமாக வைத்துக் கொண்டு நகர வாழ்வின் பல்வேறு அமசங்களை அப்பட்டமாகத் தோலு ரித்துக் காட்டும் முறையில் இக்கவிஞரின் எழுதுகோல் ஓடி யுளளது. இதே போன்று பாலகங்காதர திலக் எனும் மற்றொரு கவிஞர் இன்றைய வாழ்க்கையைத் தம் போக்கில் 'நியூ சிலபஸ்" என்ற தலைப்பில், "அமெரிக்காவில் டாலர் விளையும் இந்தியாவில் மக்கட்பேறு விளையும் பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டே செல்வந்தனையும் சுற்றிக் கொண்டுள்ளது. விருப்பம் வட துருவம்; விதி தென் துருவம், மனிதன் இதன் நடுவில் பந்து போல துள்ளிக் குதிக்கும் வினோதம் நாடடுப் புறத்து நடிகைக்கு திரைப்பட நட்சத்திரம் பகல் கனவு: பட்டிணத்து மைனருக்கு ஹாலிவுட் சொர்க்கம் மனத்தில் தூயமை இல்லாவிடினும் மல்லிகைப் பூப்போல சிரிப்பதுதான் இந்நாள் விவேகம்."