பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 "ராஜசேகர சரித்திரம் (1878) புதின வளர்ச்சியில் ஒரு மைல கலலாக உருவாகியதெனலாம். இஃது முழுக்க முழுக்க மூல நூலனறு; ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய 'தி விகார் ஆஃப் வேக்ஃபில்ட்" எனற ஆங்கில நாவலின் தழுவலேயாகும. தெலுங்கு இலக்கிய உலகில் புத்திலக்கியத் துறை வலு வாகக் காலூனற வழிவகுத்த கந்துகூரி வீரேசலிங்கம் 'விவேக வர்த்தனி' என்ற மாத இதழையும் தடத்தி இலக்கிய வளர்ச்சிக்கு வேகமும் விறுவிறுப்பும் ஊட்டி யவர். தொடக்கத்தில் புதின இலக்கியத் துறையை "வசன பிரபந்தம்' என்ற என்ற பெயரிலேயே அழைத்து வந்தனர் இருபத்தைந்து ஆண்டுகள கழிந்த பினனரே ஆங்கிலப் பெயரான நாவல்' என்பதனை அடியொறறி 'தவல' என்ற சொல்லைப் பயனபடுததலாயினர். ஆந்திர மக்களின் அகவாழ்விலும் புற வாழ்விலும் பல்வேறு சீர்திருத்தங்களை ஏற்படுத்த விழைந்த வீரேச லிங்கம் புதினம முதலான உரைநடை இலக்கியத் துறை யை வலுவோடு பயன்படுத்த விழைந்த செம்மலாவார். தெலுங்குப் புதின இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றல் மிக்க உந்து சக்தியாக விளங்கியது 1873ஆம் ஆண்டில் "சிந்தாமணி’ என்ற மாத இதழின் தோற்றமாகும். ஆண்டு தோறும் இவ்விதழ் நடததி வந்த புதினப் போட்டியில் பலரும் பங்கேற்றனர். சிறந்த புதினத்தை ஒவ்வோராண் டும் தேர்ந்தெடுத்துப் பரிசளித்ததின் மூலம் சிறந்த புதினம் ஆண்டுதோறும் வெளிவர ஏதுவாயிற்று. இப்போட்டியில் தொடர்ந்து கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றவா களில் சிலகமர்த்தி லட்சுமி நரசிம்ம கவி எனபவர் குறிப பிடத்தக்கவராவார்.இவ்வாறு தெலுங்குப் புதின இலக்கிய