பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சமுதாய விழிப்புணர்வை மையக் களமாக் கொண்டு உள்ளுணர்வுகளை திறம்படச் சித்திரிப்பதில் இவர்கள் தனியாற்றல் மிக்கவர்களாக விளங்குகிறார்கள் என்று கூடக் கூறலாம். பெண்களின் பிரச்சினைகளை மனப் போராட்டங்களை உளவியல் அடிப்படையில் முப்பாள ரங்கநாயகியம்ம போன்றவர்கள் அற்புதமாகச் சித்திரிப் பதில் தன்னிரகற்று விளங்குகிறார்கள். பெண் படைப் பாளிகள் வரிசையில் லதா, வாசி ரெட்டி, சீதாதேவி, யத்தனபூடி சுலோசனா ராணி, பூரீதேவி, பீனா தேவி, பரி மளா சோமேஸ்வர் துரகா ஜானகி ராணி, சாரதா எனப் பட்டியல் விரிந்து கொண்டே செல்லுமளவுக்குப் பெண் படைப்பாளிகள் தெலுங்கு இலக்கிய உலகில் மிகுந்துள்ள னர். தெலுங்குச் சிறுகதைத் துறை குரஜாடா அப்பா ராவ் காலத்திற்குப் பின்னரே வளர்ச்சிப் பா ைத யி ல் துரித ந ைட போ ட த் தொடங்கியதெனலாம். அவருக்கும் முன்னதாக சிறுகதை என்ற வடிவம் இருந்தா லும் கூட இன்று நாம் சிறுகதையாக ஒப்புக் கொள்ளும் சரியான வடிவமைப்பில், அதற்கேற்ற உததிகளைக் கையாண்டு சிறுகதைகளை வடித்து மக்களிடையே உலவ விட்ட பெருமை குரஜாடா அப்பா ராவ் அவர்களையே சாரும், எனவே, தெலுங்கு இலக்கிய உலகம் அவரை 'சிறு கதைத தந்தை' என்ற அடைமொழியால் அழைத்துப் பெருமைப்படுகின்றனர். நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மக்களின் வாழ்வை நகைச் சுவையுடன் விவரிப்பதில் முனி மாணிக்கிய ராவ், சிந்தா தீச்சுலுவும் சிறந்து விளங்குகிறார்கள். பெண் களின் பிரச்சினையை கருவாக அமைத்து,நல்ல சிறுகதை களை உருவாக்குவதில் வலலவர் குடிபாடி வெங்கடாசலம் பாலகும்மிபத்மராஜாவும் சிறுகதை இலக்கியவுலகில் தனக்