பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தெலுங்கு இலக்கிய வளர்ச்சிப் பாதையில் உரைநடை யில் இலக்கிய நடையின் இடத்தை இடைக்காலத்தில் பேச்சு வழக்குச் சொற்கள் பெருமளவில் ஆக்கிரமித்துக் கொண்டன. எப்படியோ இப்பேச்சு வழக்கு நடையை இலக்கிய வார, மாத இதழ்களும் நாளேடுகளும் வானொலியும் மனதார ஒத்துக் கொண்டு ஆதரவளித்து வந்தபோதிலும் பலகலைக்கழகங்கள், பாட நூல்களில் இப்பேச்சு வழக்கு நடை இடம் பெறுவதை ஆதரிக்க வில்லை என்பது இங்குக் கவனிக்கத்தக்கதாகும். இன்று பேச்சு வழக்கு இடததை மீணடும் இலக்கிய நடைக்கே திருப்ப வேண்டும் என்ற உணர்வு இலக்கியப் படைப் பாளர்கள் மத்தியில் மட்டுமல்லாது வாசகர்களின் உள்ளத திலும் அழுத்தமாக எழுந்துள்ளது. இஃது தெலுங்கு இலக்கியத்தில் மற்றுமோர் மாற்றத்துக்கு வழிவகுக்கும் எனலாம். தெலுங்கு இலங்கிய வளர்ச்சியில் மொழி பெயர்ப்புத் துறைக்கும் பங்கு உண்டு. மேனாட்டார் வருகைக்கு முன் சம்ஸ்கிருத மொழி இலக்கியங்களை மொழி பெயர்த்தும் தழுவியும் உருவாக்கிய இலக்கியங்களே தெலுங்கு மொழி யில் மிகுதி. மேனாட்டார் வருகைக்குப் பின ஆங்கிலும் முதலான மேனாட்டு மொழி இலக்கியங்களின் பல்வேறு வகைகளையும் தெலுங்கில் பெயர்த்துத் தெலுங்கைச் செழுமைப்படுத்தினா. கவிதை, புதினம், சிறுகதை, திறனாய்வு என பல்வேறு துறைகளையும் ஆங்கில மொழி இலககியப் போக்கையும் அடியொற்றி மூலநூலாகவே எழுத வேண்டும் என்ற வேடகை புலமையார்களின உள்ளத்தில் முளைவிட்டு எழவும் இதுவே காரணமாக அமைந்தது அதே போன்று இந்தி, மராட்டி, தமிழ், வங்காளி போன்ற இந்திய நாட்டு மொழி இலங்கியங்களை இறக்கு மதி செய்தும் ஏற்றுமதி செய்தும் தெலுங்குக்கு வளமூட்டி