பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலையாள இலக்கியம் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் அரபிக் கடலுக்கும் இடைப்பட்ட அழகான நிலப்பகுதியான கேரளாவில் சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் பேசும் மலையாள மொழி இலக்கியத்தின் வரலாறே பதினைந்தாம் நூற் றாண்டிலிருந்துதான் தொடங்குகிறது. அதறகு முன் உரு வான மலையாள இலக்கியங்கள் எனக் கூறக் கூடியது எதுவுமே இருந்ததாகத் தெரியவில்லை.இன்னும் சொல்லப் போனால் பதினாறாம நூற்றாண்டில் தோன்றிய எழுத் தச்சன் காலத்திற்குப் பின்னர்தான் மலையாள இலக்கியம் சரியான திக்கில் நிலையான உருவோடு வளரத் தொடங் கியது எனலாம். மிக உயர்ந்த இலக்கியச் சிறப்பும் தத்துவச் சிந்தனை யும் பொதிந்துள்ள அத்யாத்ம ராமாயணம்’, ‘மகா பாரதம்' போன்ற பேரிலககியங்களை மலையாள மொழி யில் எழுதி வளமூட்டிய எழுத்தச்சனைப் போன்றே பதினேழாம் நூற்றாண்டில் கொட்டாரக்கர தமபுரான் , கோட்டயம் கேரள வர்மா, உண்ணாயி வாரியார் போன்றவர்கள் கதகளி' இலககிய வளர்ச்சிக்குப் பெருந் துணை புரிந்தார்கள. பக்தியுணர்வை ஊட்டுவதற்கும் தத்துவக் கருததுக் களைப் பரப்புவதற்கும் பழமபெரும் இதிகாசக கதையுரு வில் புலமையாளர்களிடையே மட்டும் இருந்து வந்த மலையாள இலக்கியததை, மக்களின் எண்ணங்களையும் பிரச்னைகளையும் சமுதாயத்தின் குறை நிறைகளையும் பணடிதர் நடையில் அல்லாது பாமரர் மொழியிலேயே பிரதிபலிக்கும் புதுவகைப் போக்கில் வளர்க்க முனைந் தவர் குஞ்சன் நம்பியார் ஆவார். பதினெட்டாம் நூற்