பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 றாண்டில் தோன்றிய அவர் "துள்ளல் பாட்டு' என்ற புது வகை இலக்கியத் துறையைத் தோற்றுவித்தார். சமுதாயத் திற்கானும் குறைபாடுகளை நையாண்டி செய்யும் போக்கில் முழுமையாக வெளிப்பட்ட முதல் மக்கள் கவிஞர் இவரே எனக் கூறலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இநநாடு வந்த மேனாட்டினர் வருகையின் விளைவாலும் புதிய கல்வி முறையின் எதிரொலிப்பாலும் அச்சுத் தொழில் பெருக்கத் தாலும் உரைநடை வளர்ச்சியினாலும் புதுப்புது வடிவங் களில் மலையாள கவிதையும் புததுலக இலக்கியத் துறை களும் மிடுக்கோடு வளரத் தொடங்கின. இலக்கியத் துறையில் ஏற்பட்ட இந்த மாபெரும் மாறுதலுக்கு குமாரன் ஆசான், மகாகவி வள்ளத்தோல், உள்ளூர் பரமேஸ்வர ஐயர் போன்ற கவிஞர்களும், சந்து மேனன, ஈ.வி. கிருஷ்ணப் பிள்ளை, வி.வி. ராமன் பிள்ளை போன்ற கதை இலக்கிய எழுத்தாளர்களும் வேக மும் விறுவிறுப்பும் ஊட்டினர். நாடு விடுதலை பெற்ற பின்னர் எல்லாத் துறைகளி லும் ஒரு மாற்றம் ஏறபட்டது போன்றே இலக்கியத் துறையிலும் புதிய போக்குகளும் உததிகளும் வலுவாகக் காலூன்றி வளப்போடு வளரத் தொடங்கின. மலையாள இலக்கியத் துறையைப் பொருத்தமட்டில் இதற்கான அடிப்படை விடுதலைக்குச் சற்று முன்னரே போடப்பட்டு விட்டதெனலாம். ஆசானுக்கும் வள்ளத்தோலுக்கும் பின்னர் பெருங் கவிஞர் எனப் போற்றப்படும் ஜி. சங்கர குரூப் கவிதை இலக்கியத் துறையை மற்றவர்களினறும் சற்று மாறுபட்ட புதிய நோக்கில் வளர்க்கத் தொடங்கினார். கற்பனை தான் கவிதைக்கு அடிப்படை என்ற நிலையைக் கடந்து கருத்தும் சிந்தனையுமே கவிதைக்கு இன்றியமையா அடித்