பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் முற்போக்குக் கருத்துக்களால் பாதிக்கப்படாத மலையாளக் கவிஞர்கள் மிகமிகக் குறைவு எனக் கூறலாம். எத்தகைய புதிய மாற்றங்களுக்கும் முழுமையாக உட் படாத நிலையில் பழைய பாணியையே பின்பற்றி கவிதை புனையும் ஒருசில கவிஞர்களுள் பி. குஞ்ஞரரமன் நாயர். கே.கே. ராஜா போன்றோரை முக்கியமாகக் குறிப்பிடலாம். கவிதைத் துறையைக் காட்டிலும் மலையாள இலக் கிய உலகின கவனம் புதினத் துறையையும் சிறுகதைத் துறையையுமே சார்ந்துளளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். கவிதைகளைவிட கதை இலக்கியத் துறை யிலேதான் மலையாள மண்ணின் தனி வாடை தெளி வாகப் புலப்படுகினறது. மலையாள மொழியில் உரிய வடிமைப்போடு வெளி வந்த முதல் புதினம் எனக் கூறப்படும் இந்து லேகாவே ஒரு சமூகப் படைப்பாக அமைந்தது. அதேபோக்கில் மலையாள புதினத் துறையின் வளர்ச்சிக்கு வங்கப் புதின உலகம் முன்னோடிப் பாதையாக அமைந்தது எனலாம். நாளடைவில் பழைய கற்பனைப் போக்கு விடைபெறவே கலப்பற்ற பிரத்தியட்ச உண்மைகளைத் தத்ருபமாகச் சித்திரிக்கும் ரியலிலப் போககுத் தலைதுாக்கி மலையாள புதின இலக்கிய உலகில் நிலையான இடத்தைப் பெறத் தொடங்கியது. மாபஸான், ஃபலாபர்ட், செக்கோல், இப்லன் போன்ற மேலைநாட்டினரின் பிரத்தியட்சப் போக்கில் மலையாள கதை இலக்கியத் துறை பீடுநடை போட இடையறாது முயன்றது. ஏ. பாலகிருஷ்ணப் பிள்ளையின வழிகாட்டுதலில் தகழி, கேசவதேவ் போன்ற வர்கள் மலையாள கதை இலக்கிய உலகில் ஒரு புதுயுகத் தையே தோற்றுவிக்கலாயினர். நாட்டு விடுதலைக்குப்