பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பின்னர் சாதிப்பிடிப்பினின்றும் வறுமைச் சேற்றினின்றும் அறியாமை இருளினினறும மக்களை விடுவிக்க எழுத் தாளர்கள் தம் எழுதுகோலை பேராற்றல மிக்கக் கருவி யாகப் பயன்படுததத தொடங்கினர். சமூகப் பிரச்னைகளை மையமாக வைத்து தகழி எழுதிய ஆரம்பகால புதினங்களான "தோட்டியுடெ மகன’’ (தோட்டியின மகன). "தெண்டி வர்க்கம்' போனறவைகள் சமூகத்தின் அடித்தளத்தில் வாழும் தோட்டி போன்ற தாழ்ந்த நிலையில் வாழும் ஏழை மக் களின் வறுமை வாழ்க்கையையும் சமூகத்தில எதிர்நீச்சல் போட்டு உயரததுடிக்கும் ஆசைக் கனவுகளையும் கண் ணாடிபோல் பிரதிபலித்தன. தம் மகனை தோட்டி என்ற தாழ்ந்த அந்தஸ்திலிருந்து உயர்த்த முயன்ற தாய் தந்தையரின் ஆசை நிறைவேறாது அவர்கள் இறப்பதை யும், தோட்டித் தொழிலின் கசப்பான அனுபவங்கள் ஊட்டிய வெறுப்புணர்ச்சியினாலும உந்தப்பட்ட தோட்டி மகன். தோட்டித் தொழிலாளர்களின புரட்சிக் குத் தலைவனாகி இறுதியில் பலியாவதையும் விளக்கும் இப்புதினம் தோட்டி வாழ்க்கையின் சீர்கேட்டைச் செல் விய முறையில் படம் பிடிததுக் காட்டி விடுகிறது. மற றொரு படைப்பான "ரண்டிடங்கழி’ (இரண்டு படி) குட்ட நாட்டின சதுப்பு நிலங்களில வாழும் நிலமற்ற ஏழைக் குடியானவப் புலையர்களின் சீரழிநத வாழ்க்கை யை உயிரோவியமாகத் தீட்டிக் காட்டுகிறது. இவரது புகழ்பெற்ற மற்றொரு புதினமான "செம்மீன ஆழப் புழை மீனவர்களின் வாழ்க்கையை அப்பட்ட மாகச் சித் தரிததுக் காட்டுகிறது. ரியலிலப் போக்கில் இப்புதினம் அமைக்கப்பட்டிருந் தாலும் கதையின் முடிவு என்னவோ ரொமாண்டிஸ்ப பாதையிலேயே செனறு முற்றுப்பெறுகிறது. ரியலிலமும் ரொமாணடிஸ்மும் இரு துருவங்களல்ல:அவை இணைந்து