பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 செல்லவும் முடியும் என்பதற்கு இப்புதினம் தக்கதோர் எடுத்துக்காட்டாக உள்ளது. மேலும், இக்கதை நிகழும் பகுதிகளையும் மீனவ மக்களின் வாழ்க்கை முறையையும் 'கற்பு தவறின மீனவப் பெண் கடலம்மையின் கடுஞ் சீற்றத்துக்கு இரையாவாள்' என்ற மீனவர் நம்பிக்கையும் பிரத்தியட்ச உண்மைக்குச் சற்று மாறாகத் தோன்றினும தன் எழுத்து வண்மையின் வாயிலாக அவை அனைததை யுமே ரியலிஸம் என எண்ணி ஏற்கும்படி செய்துவிடுகிறார். தனி மனிதர்களின வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் எண்ணங் களையும் பிரதிபலிப்பதன மூலம் அந்த இனத்தின் ஒட்டு மொத்தமான இயல்புகளையே சித்தரிததுக் காட்டுவது இவரது படைப்புகளில காணும் தனிச்சிறப்பாகும். இத்தகைய ரியலிலப் போக்கில் தகழிக்கு இணையாக விளங்கும் கேசவதேவ் தம் படைப்புக்கு வேண்டிய பாத் திரங்களையும் நிகழ்ச்சிகளையும் சாதாரண ஏழை மக் களின் மத்தியிலிருந்தே தேர்ந்தெடுத்து அமைக்கிறார். சமூகத்தின் கடைக்கோடியில் வாழும் ரிக்ஷாக்காரனிட மும் மற்றவர்களிடமும் காண முடியாத அன்பும் பரிவும் அசாதாரண தியாக உணர்வும மலர்ந்து மணம் பரப்ப முடியும் எனபதற்கு ஏற்ற எடுத்துக்காட்டே 'ஒடயில் நின்னு' (சாக்கடையிலிருந்து) எனற புதினத்தில் வரும் "பப்பு' என்ற பாத்திரம். தேவின் படைப்புக்கள் பெரும் பாலும் சமூக சீர்கேட்டை எதிர்த்து முழக்கமிடுவதாகவும் தொழிலாளர் முன்னேற்றத்தை குறியாகவும, வாழக்கை யினுள மறைந்து கிடக்கும் ஆழ்ந்த இரகசியங்களை அகழ்ந்தெடுத்து வெளிக்கொணரும போக்கிலுமே அமைந் துள்ளன 'உலக்க' (உலக்கை), ஆர்க்குவேண்டி" (யாருக் காக), நடி' (கடிகை), ப்ரந்தாலயம் (பைத்தியக்கார விடுதி) போன்ற புதினங்கள் உழைக்கும் சமுதாயத்திடை யே பொங்கி நிற்கும் புரட்சியுணர்வையும் சமுதாய சீா கேட்டிற்கு அடிப்படையான காரணங்களையும் விணடு ரைப்பனவாகவும் அமைநதுள்ளன.