பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுரை குறிப்பிட்ட சில விஷயங்களையே வளைய வளைய வந்து அலுப்புச் சலிப்பின்றி எழுதிக் குவிப்பது நமக்குள்ள பெருமைகளுள் ஒனறு. நம்மைச் சுற்றியுள்ள பிற மொழி களில் என்னதான் நடக்கிறது என்பதைப் பற்றி என்றுமே நாம் கவலைப்பட்டதில்லை. இங்கு மட்டுமா இந்நிலை, அங்கும் அதுதான் நிலைமை. இந்நிலைமையைச் சற்று நகர்த்திப் பார்க்க, நான் ஆசிரியனாக இருந்த புத்தக நண்பன்' மாத இதழ் மூலம் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகளில் கவிதை, புதினம், சிறுகதை, திறனாய்வு போன்ற துறைகளில் புகழ் பெற்ற வாழும் எழுத்தாளர்களை வகைக்கு ஒருவராகத் தேர்வு செய்து அவர்தம் படைப்புகளை விமர்சிப்பதன் மூலம் அங்குள்ள இன்றைய இலக்கியப் போக்குகளை உரிய முறையில் நம்ம வர்களுக்கு உணர்த்துவதே அம்முயற்சி, 'புத்தக நண்பன்' மறைவுக்குப்பின் நூலகம்' மாத இதழில் அப்பணியைத் தொடர்ந்தேன். திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அவர் கள் ஊட்டிய உற்சாகத்தால் அப்பணி மூன்றாண்டுகள் தொடர்ந்தது. அதன விளைவே இப்போது உங்கள் கரங்களில் தவழும் இந்நூல். படித்துப் பாராட்டியதோடு அஃது நூல் வடிவில் வெளிவரவேண்டும் என வலியுறுத்தி வந்தவர் திறனாய்வுச் செல்வர் திரு சோ. சிவபாதசுந்தரம் அவர்கள். அதற்கிணங்க கன்னட, தெலுங்கு, மலையாள