பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 கதைத் துறையைக் கையாளுகிறார்கள் எனில அஃது மிகையன்று. வெறுங்காதலுக்கும் பயனற்ற அசைபோடும் நிகழ்ச்சிகளுககும் முக்கியத்துவம் தரும் காலம் மலையாள எழுத்துலகைப் பொறுததவரை ஓரளவு மலையேறிவிட்ட தெனலாம். சில குறிப்புகளைக்கொண்டே விரிந்த சிந்தனைப் பரப்பைக் காட்டும கருவியாகப் சிறுகதையை லாவக மாகக் கையாள்கிறார் தகழி. குட்ட நாட்டில் பெருக் கெடுத்த வெள்ளததின்போது தண்ணிரில் தவித்த தாயொன்று கூரையொன்றின் மீது ஏறித் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்ட காட்சியைச் சிததரிப்பதன் மூலம் வெள்ளக் கொடுமையையே அப்பட்டமாகப் புலப்படுத்தி விடுகிறார். அவரது சிறு கதைகளில் பல படிக்கும் வாசகர் களிடையே வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பும் அளவுக்கு மனவுணர்வுகள் எனும் கசப்பான உண்மைகளை வெளிப் படுத்தும் திரையாக அமைந்துள்ளன. லலிதாம்பிகா அந்தர்ஜனம் போன்ற பெண் எழுத் தாளர்கள் வரதட்சினைக் கொடுமைகளையும் சமூக அநீதிகளையும் பயனற்ற கம்பிரதாயப் போக்குகளையும் எதிர்த்து சீர்திருத்த நோக்கில் 'தகர்ந்த தலமுற' (சிதைந்த தலைமுறை) போன்ற சிறந்த சிறு கதைகளைப் படைத்துள்ளனர். இன்னும் கேசவதேவ், பவீர். பொன் குன்ன வர்க்கி, காருர் நீலகண்ட பிள்ளை, உறுப்பு என்ற பனை பெயரில் எழுதும் பி. சி. குட்டிகிருஷ்ணன், வெட் டுர் ராமன நாயர், முட்டதது வர்க்கி, பேராசிரியர் ஜோஸப் முண்டசேரி, கைணிக்கர பத்மநாப பிள்ளை, எம். டி. வாசுதேவன் நாயர், ஆர். எஸ். குருப், ஈ. எம். கோவூர், பொற்றக்காட், நந்தனார், கோவலன், பாரப் புறத்து, கே. சரஸ்வதி அம்மா, கே. டி. முஹம்மத் போன் றோர் உயிர்த் துடிப்புள்ள சிறுகதைகளைப் புனைந்து 4