பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 "மான தண்டம்" (அளவுகோல்), "வாயசைாலையில்' (வாசக சாலையில்) போன்ற தொகுப்பு நூல்கள் குறிப் பிடத் தக்கவைகளாகும். குட்டிக் கிருஷ்ண மாராரும் திற னாய்வுத்துறை வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க அளவுக்குப் பெரும் பணியாற்றி வருகிறார் மற்றும் எஸ்.வி. கிருஷ்ண வாரியார் கே சுரேந்திரன் கே. என். எழுத்தச்சன் பி.ஏ வாரியார் ஏ. டி.ஹரிசர்மா போன்றோர் தொடர்ந்து இத்துறையின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உழைத்து வரு கின்றனர். மொழிபெயர்ப்பு நூல்கள் கடந்த இருபதாண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கும் பெருந்தொகையாக வெளி வந்து அறிவுப் பரிமாற்றத்துக்குப் பெருந்துணை புரிந் துள்ளது. அதே போன்று விஞ்ஞான நூல்களும், சிறுவர் இலச்கியங்சளும் ண சமாள அளவில் வெளிவந்துள்ளன விடுதலைக்குப் பின்னர் பெருக்கமடைந்த பத்திரிகைத் துறை இவ்விலக்கியத் துறைகள் அனைத்திற்குமே பேரா தரவு அளித்து வருவதால் புதிய புதிய உத்திகளைக் கை யாண்டு புதிய போக்கில் பிற்பகுதி எழுததாளர்களின் கவனத்தைத் தன்பால் ஈர்க்கும் பல்வேறு இலக்கிய அமைப்புகளும் ஏடுகளும் எலலாவற்றிற்கும் மேலாக எழுததாளர்களாலே இயக்கப்படும் ஆசியாவின் மிகப் பெரிய நூல் வெளியீட்டு நிறுவனமான சாஹித்திய ப்ரவர்த்தக சஹகரண சங்கம்’ என்ற அமைப்பும் பேருதவி யாக அமைந்து வலுவூட்டி வருகின்றன.