பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் கன்னட இலக்கிய உலகின் இணையற்ற ஆஸ்தியாக விளங்கும் டாக்டர் மாஸ்தி வேங்கடேச ஐயங்கார் இன் றைய கன்னட சிறுகதைத துறையின் தந்தையாகப் போற்றப்படுகின்றார். மாஸ்தியின முன்னோர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை "மாஸ்தி வேங்கடேச ஐயங்கார்’ என்ற பெயரைக் கொண்டே ஊகிததறிந்து கொள்ளலாம். கன்னடப் புத்திலக்கிய மறுமலர்ச்சியுலகின் முன் னோடிகளில் மிக முக்கியமானவராகக் கருதப்படும் மாஸ்தி வேங்கடேச ஐயங்கார் சீனிவாசா' எனற புனைப் பெயராலேயே கன்னட மக்களிடையே பெரும் புகழ் பெற்றுள்ளார். இவர் கவிதை, புதினம், நாடகம், திறனாய்வுக் கட்டு ரைகள் முதலியவற்றை எழுதியிருப்பினும் அவரது சிறு கதைகளே அவரது பெரும் புகழுக்குக் காரணமாக அமைந்துள்ளன. கன்னட இலக்கிய உலகில் சிறுகதைத் துறை காலூன் நிய காலத்தில் அத்துறையைச் செழிப்பாக வளர்த்தவர் களில் கேரூர் வாசுதேவாச்சார், பஞ்சே மங்கேஷ் ராவ் போன்றவர்களைச் சிறப்பாகக் குறிப்பிடலாம. இவர் களின் அடிச்சுவட்டிலேயே சிறுகதைப் படைப்புகளை உருவாக்க முனைந்த மாஸ்தி விரைவிலேயே புதிய புதிய உத்திகளைக் கையாண்டு சிறுகதைத் துறையை சக்தி மிக்க இலக்கியக் கலையாக வளர்த்து விட்டார், கன்னட மக்களின் பண்பாட்டையும் வாழ்க்கையின் ஒவ்வொரு