பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 அசைவுகளையும் கூட ஆடியிற் காணும் உருவம் போன்று சுவையாகப் படம் பிடித்துக் காட்டுவது இவருக்கு நன்கு கைவரப்பெற்ற இலக்கியத் திறமையாகும் இலக்கிய மெரு கோடு விளங்கும் இவரது சிறுகதைகள் ஒவ்வொன்றுமே ஒரு சிறிய காவியம என்று கூறலாம். அரை நூற்றாண்டுக்கு முன்பு இவரால் எழுதப்பட்ட "ரங்கன மதுவே (ரங்கனின் திருமணம்) என்ற சிறு கதையே இவரது முதல் படைப்பாகும் அன்றிலிருந்து இன்றுவரை இவர் உருவாக்கிய நூற்றுக்கணக்கான சிறு கதைப் படைப்புகள் பதின்மூன்று தொகுதிகளாக வெளி வந்துள்ளன உணர்ச்சியை, சூழ்நிலையை, மனநிலையை குணசித்திர பாவத்தை, வாழ்வின் உயிரோட்டமான உண்மைகளை அடித்தளமாகக் கொண்டு பின்னப்பட்ட இச்சிறு கதைகளில் ஹேமகூட திந்த ஹிந்திருகித மேலே (ஹேமகூடததிலிருந்து வந்த பினனர்), கெளதமி கேளி கத" (கெளதமி சொனன கதை) மொசரின மங்கம்மா” (தயிர்க்காரி மங்கம்மா) முதலியன அமரத்துவப் படைப் புக்களாகும். மொசரின மங்கம்மா’ போனற நாட்டுப்புற மக்களின் வாழ்ககையை-உணர்ச்சிகளைத் தோலுரித்துக் காட்டும் மாஸ்தி சரிபுத்திரரின் அந்திம காலம் போன்ற தத்துவார்த்தக் கதைகளையும் மசுமதி போன்ற தேச பக்தக் கதைகளையும் "நிஜகல் ராணி போன்ற வரலாற் றுப் பின்னணிகொண்ட கதைகளையும் படைத்துள்ளார். ஆழ்ந்த உண்மைகளை யெலலாம் அனாயாசமாக சிந்தனைத் தெளிவோடு புலப்படுத்தும் இவரது சிறுகதை களில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்த மூதறிஞர் ராஜாஜி மாஸ்தியின சிறுகதைகளில் சிலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மாஸ்தியே தமது சிறு கதைகளில் பல வற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட டுள்ளார்.