பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 அரங்கேறிய இந்நூல் இலக்கிய உலகில் பெரியதொரு சலசலப்பையே உண்டாக்கிவிட்ட தெனலாம். இவரது தொடக்க காலக்கவிதைகளின் கருப் பொருளாக அமைந்தவை இயற்கையின் அழகுக் காட்சி கள், காதல் உணர்வு, அன்பு, நாட்டுப்பற்று, கலை' தத்துவம் போன்றவைகளேயாகும். நாளடைவில் வாழ்க் கைச் சிக்கல்களைப் பற்றியும் அச்சிக்கலகளுக்குக் காரண மான மனவுணர்களைப் பற்றியும் கவிதைகள் வடித்தார். வாழ்க்கைப் போராட்டங்களும் சமுதாயப் பிற்போக்குக் கூறுகளும் இவரது கவிதைப் பொருள்களாக அமைத் துள்ளன. இவரது கவிதைகள் அனைத்திலும் காணப்படும் ஒரு தனிச் சிறப்பு எளிய கவர்ச்சியான நடையாகும். நாடோ டிப் பாடல்களில் காணும் தன்மையை இவரது பாடல்கள் பெற்றிருப்பதால் மக்கள் அனைவருமே எளிதாகக் கவிதை களின்பால் கவரப்பட்டதோடு அவற்றை சுலபமாக மனனம செய்து கொளளவும் இயன்றது. இவ்வாறு இவர் கிராமியக் கவிதையின் மறுமலர்ச்சிக்குப் பெரிதும் உழைத் துள்ளார் எனக் கூறினும் பொருந்தும. பேந்த்ரேயின் மற்றொரு தனிச்சிறப்பு தாம் எடுத்துக் கொண்ட பொருளுக்கு இவர் தரும் உருவச் சிறப்பாகும. இவரது புகழ்பெறற நூலான "ஹத்தி ஹாருத்திடே" (பறவை பறக்கிறது) எனற கவிதையில் நுண்பொருளான காலத்தையே பருப்பொருளான பறவையாக உருவகித்துப் பாடியுள்ளார். இதன்மூலம் அவரது கவிதை உயிருட்டம் உடையதாக ஆகிவிடுகிறது. இவரது 'பெளகு' (வைகறை) பெளதிங்கள் நோட' (நிலவொளியைப் பார்க்க) ஷரா வண’ (ஷராவண மாதம்) பாதர கித்தி (வண்ணாத்திப் பூச்சி) போன்ற கவிதைகளில இயற்கைச் சிறப்பை இனிது விளக்கியுள்ளார்.