பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 என்பது ஒர் இசைக்கருவி) என்ற சிறு நாவல் இருபத்தைத் தாண்டுகட்கு முன்பு எழுதப்பட்டதாயினும் இன்றும் சோமனின் அவலம் நிறைந்த சோக வாழ்வு படிபபோர் உள்ளத்தை நெக்குருகச் செயவதாகவே உள்ளது. பழங்குடி மக்களின் வாழ்வை உள்ளது உள்ளவாறே சுவை குன்றாது படம் பிடித்துக் காட்டுவதில் கைதேர்ந் தவர் காரந்த் அவர் பழங்குடியினரில் ஒருவராக சில கால மேனும் வாழ்ந்து அவர்கள் வாழ்வின் அடிப்படைத் தன் மைகளை நன்கு அறிந்துணர்ந்து அதன் பின்னரே அவர் களது வாழ்வுக்குக் கறபனை மெருகேற்றி கதை வடிவில் வடித்துக் கொடுக்கிறார். இவ்வகையில் பெருஞ்சிறப்புக்குரிய புதினமாக இன்று விளங்குவது குடியர கூசு, (குடியரின் குழந்தை) என்ப தாகும் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் புராதன குடியர் இன மக்களின் வாழ்க்கையை விளக்கும் காவிய மாகவே விளங்குகிறது இப்புதினம். காரந்தின் புதினங்கள் அனைத்துமே கர்நாடக மக் களின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் அம்மண்ணிற் கேயுரிய இயல்பான தன்மையையும் பிரதிபலிப்பனவாக அமைந்துள்ள போதிலும் அவை இந்திய வாழ்க்கையைபாரதப் பண்பாட்டின் சாயலைப் பிரதிபலிக்காமல் இல்லை. உள்ளதை உள்ளவாறே சித்தரிப்பது காரந்தின் தனி இயல்பு. வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் காணும் குறை நிறைகளையும் நன்கு ஆய்ந்தறிந்து அவற்றை தமக்கே யுரிய முறையில கதைப்போக்கில் சுவைபட விவரித்துக் கூறுகிறார். தமது சொந்த விருப்பு வெறுப்புக் களை தாம் படைக்கும் கதாபாத்திரங்கள் மூலம் சுமத்தி 5