பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 1902ஆம் ஆண்டில் பிறந்த சிவராம காரந்த் பல் கலைக் கழகப் படிப்புவரை எட்டவில்லை யென்றாலும் அவரது அரிய இலக்கியத் தொண்டைப் பாராடடி கர்நாடகப் பல்கலைக் கழகமும் மைசூர்ப் பல்கலைக் கழகமும 'ஆனரரி டாக்டர்' பட்டமளித்துப் பெருமைப் படுத்தியுள்ளது 1960ஆம் ஆண்டில் 'யக்கூடிகான பய லாடா' (திறந்தவெளி யக்சுகான நாடகங்கள்) என்ற கர்நாடக நாடோடி நடன-நாடகங்களைப் பற்றிய நூலுக்கு பரிசளித்துப் பெருமைப்படுத்தியுள்ளது. அதே நூலிற்கு ஸ்வீடிஷ் நாடோடி நாட்டியக கழகமும் மைசூர் அரசாங்கமும் பரிசளித்துப் பாராட்டியுள்ளன எழுபது வயதைக் கடந்து நிற்கும் காரந்த் இன்றும் இளைஞரைப் போலவே துடிப்போடு பல புதிய இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் நூலாசிரியராகவும் கன்னட நூல் வெளியீட்டாளரா கவும் சுதந்திரமான எழுத்துப் பணியாற்றி வரும் இவர் ஆரம்ப நாட்களில் கன்னட மொழித் திங்களிதழ் ஒன்றின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். நிறை புகழ் பெற்றிருந்த போதிலும் மிகவும் பிடி வாதக்காரர் கர்வம் மிக்கவர்; யாரோடும் ஒத்துப் போகும் இயல்பு இல்லாதவர்' என்ற அவப் பெயரையும் சிலர் சுமத்தவே செய்கின்றனர். மக்களைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும இவருக்கு அழுத்தமான கொள்கைகள் உண்டு. அவற்றில் இவருக்குத் திடமான நம்பிக்கையும் உண்டு. எனவே இவர் நம்புவனவற்றை இவர் ஒளிவுமறைவு இன்றி அழுத் தந்திருத்தமாகக் கூறுகிறார். நிறைகண்ட விடத்து வெளிப் படையாக அதனை வானளாவப் புகழ்வதும் இயல்பாக