பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 இவர் இமிவரை இருபத்தைந்து கவிதை நூல்களுக்கு மேல் எழுதி வெளியிட்டுளளார். அவற்றுள் மிகச் சிறந்த வைகளாக கொழலு' (குழலி) பட்சி காசி அக்னி ஹம்ச' போன்றவைகளைக் குறிப்பிடலாம். சொல்லாட்சித் திறன் மிக்க இக்கவிதைகளில் ஆழ்ந்த தத்துவச் சிந்தனைகள் மெல்லிய நூலிழைபோல் கவிதையெங்கும் பின்னிப் பிணைந்து செல்வதைக் காண முடிகிறது. எழுச்சிமிக்க இக்கவிஞர் பழைய போக்கில் நடைபோடத் தொடங் கினாலும் புதுமைகளை இணைத்துக் கொள்ளத் தவற வில்லை டி.எஸ் எலியட் போனற புத்துலகக் கவிஞர் களின் செல்வாக்கையும் இவரது கவிதைகளில் பரக்கக் காணலாம். எதுகை மோனை எழில்மிகு வர்ணனை இவைகளில் மட்டும் கருத்தைச் செலுத்தி வலை பினனும் வலைஞனை போனறு கவிதை புனையும கலைஞன அனறு இவர் கால வோட்டத்திற்கேற்ப புதுப்புதுப் போக்குகளை இணைத்து கவிதைக்கு வலிவும வளப்பும் நலகும பாங்கினை இவரது படைப்புக்களில் காண முடிகிறது துணிந்து பழைய மரபு கவைப் புறக்கணிக்கவும் இவர் தயங்குவதாகத் தெரிய வில்லை கவிதை அ ம் சங்க ளி ல் மட்டுமலலாது கதைப் போக்கிலும் இவர் பல புதுமைகளைச் செய்துள் ளார். இவர் இயற்றிய பூரீ இராமாயண தர்சனத்தில் இராவணன் போன்றவர்களை வழக்கத்துக்கு மாறாகப் போற்றிப் புகழும் புதுவகைப் போக்கினை இதற்கு உதாரணமாகக் கூறலாம், குயிலும் ரஷியாவும் என்ற கவிதையும் கா ல வோட்டததின் வேகத்திற்கேற்ப விரைநது குதிடோடும் இவரது புத்துலகச் சிந்தனைகளுக் குக் கட்டியங் கூறுவதாகும். கன்னட மொழியில் மட்டுமல்லாது தம் கவிதைகளில் சிலவற்றை இவர் சமஸ்கிருதத்திலும் மொழி பெயர்த் துள்ளார். சமஸ்கிருதப் புலவர்களை வியப்பிலாழ்த்தும்