பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வகையில் அவை சிறந்த மொழி பெயர்ப்புகளாக அமைந் துள்ளன. இவரது பூரீ இராமாயண தர்சனம் இவரது கவித்துவத் திறமைககும் ஆழ்ந்த மொழிப் புலமைக்கும் தத்துவச் சிந்தனைக்கும் அழியா ஒவியமாக நின்று புகழ் கூட்டும அரிய படைப்பாகும. கவிதைத் துறையோடு இவரது கைவண்ணம் நிற்க வில்லை. புதினம், நாடகம், திறனாய்வு என நீண்டு செல்கிறது பொம்மன் ஹள்ளிய கிநதர ஜோகி (பொம் மன ஹள்ளியின் பாம்பாட்டி) எனற குழந்தை இலக்கி யத்தை எழுதியதன் மூலம் சிறுவர் இலக்கியத் துறைக்கும் தன் எளிய காணிக்கையைச் செலுத்தியுள்ளார். இவர். இவரது புதினங்களுள் குறிப்பிடத்தக்கது கானுாரு சுப்பம்ம ஹெகடிதி (கானூரின் கிராமத் தலைவி சுப் பம்மா) என்பதாகும். மலைநாட்டு மக்களின் வாழ்க்கைப் போக்குகளையும் நம்பிக்கைகளையும் மரபுகளையும் தெள்ளத தெளிவாகப் பிரதிபலிக்கிறது. இப்புதினம் மேலகலல்லி மடுமகளு’ என்பது மற்றொரு சிறப்புப் படைப்பாகும். நாடக இலக்கியத் துறையின் வளர்ச்சிக்கும் கணிச மான பங்கை இவர் அளித்துள்ளார். இவரது நாடகங் களுள் பெரல்கே கொறல் (கழுத்துக்கு விரல்), மஹா ராத்ரி’ போன்றவை குறிப்பிடத் தக்கனவாகும். இசைச் சிறப்புமிக்க இந்நாடகங்கள் கற்றோரை மட்டுமன்றி நாடகமாக நடிக்கப்பட்டதன மூலம் படிக்காத பாமர கிராம மக்களையும் பெரிதும் கவர்ந்தன. பூர் இராமகிருஷ்ணரிடத்தும் விவேகானந்தரிடத்தும் நீங்காப் பற்றும் பகதியும் கொண்ட இவர் இவ்விருவரது வாழ்க்கை வரலாறுகளையும் தனிததனி நூல்களாக எழுதி வெளியிட்டுள்ளார்.