பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 1934இல் வெளிவந்த 'கலோபாசகர் (கலை வழிபடு லோன்) எனற கவிதைத் தொகுப்பும் 1935இல வெளிவந்த 'பயனா (பிரயாணம்) எனற கவிதைத தொகுப்பும் இவரது சிறந்த கறபனை வளத்துககும் உளளததைக் கவரும இனிமைக கவிதை படைக்கும் ஆறறலுக்கும் கட்டி யங் கூறுவனவாக அமைந்துள்ளன. 1939இல் வெளிவநத இவரது ‘சமுத்ர கீதகளு’ (கடற் கவிதைகள்) என்ற தொகுப்பு கவிதைத் துறையில் புது முயற்சி காண விழையும் இளைஞர்களுக்கு புது வழி காட்டும் புததிலக்கியக கவிதைக் களஞ்சியமாக அமைந் தன கன்னடக் கவிதையுலகில் புது வழிவகுதத இவரைக் கன்னடக் கவிதைத் துறையின புதிய இயக்கத்தின் வலு மிக்கத தலைவராக கவிஞர் உலகம் போற்றிக் கொண் டாடி மகிழ்ந்தது. 1950இல் வெளிவந்த இவரது "நவ்ய கவிதைகளு’ (புதிய கவிதைகள்) எனற தொகுப்பு கனனட கவிதையுலகுககே புது வழிவகுத்துத் தந்த புத்திலக்கியக் கவிதைகள் எனலாம். 1957இல் இவர் வெளிலட்ட ‘த்யாவா பிரதிவி (விணனும் மணனும) என்ற காவியம் அவருக்குச் சாகித்திய அகாதெமியின பரிசைப் பெறறுத் தந்து சிறப்பித்தது. பழமைக்கும் புதுமைக்கும் இடையேயுள்ள போராட் டத்தைச் சிததரிக்கும் 1,200 பக்கங்களைக் கொணட இவரது சமரசவே ஜீவன்' (சமரசமே வாழ்க்கை) எனற புதினமும் ஷேக்ஸ்பியரது நாடகங்களோடு ஒப்பிடத தக்க ஜனநாயகா (மக்கள் தலைவன்) என்ற நாடகமும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட மார்க்ஸிம்-முதலாளித் துவம ஆகிய இரு பெரும் தந்துவங்களின் போராட்டங் களைக் கருத்தாழததோடு விளக்கும் "யுகாந்தரா (யுக மாற்றம்) எனற நாடகமும் இவரது எழுத்தாற்றலுக்கும் புத்துலக நோக்குக்கும் இணையறற எடுததுககாட்டு களாக விளங்குகினறன.