பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 இவரது ஆழ்நத புலமைககும் விமர்சனத் திறனுக்கும் சிறந்த எடுததுக்காட்டுகளாக விளங்குகினறன. இநதின கனனட கால்யத கொத்துகுரிகளு' (இன்றைய கன்னடக் கவிதையின் நோக்கம்) 'நவ்யதே ஹாகு காவ்ய ஜீவன: (புதுமையும் கவிதை வாழ்வும்) என்ற இரு விமர்சனப் படைப்புகள். கட்டுரைகளை எழுதுவதில் இவருக்குள்ள ஆற்ற லுக்கு சான்றாய் விளங்குவன இவர் இங்கிலாந்து சென்று படித்துத் திரும்பிய அனுபவங்களைப் பசுமையாகச் சித் தரிககும் சமுதரதாசே இண்டா’ (கடல் கடந்து) பயண நூலும் செலுவி நிலவு' (அழகு நிலையம்) என்ற மற் றொரு கட்டுரைத தொகுப்பும் கணண்டததிலும் ஆங்கிலத் திலுமாகக் கிட்டத்தட்ட 40 நூல்களுககுமேல் எழுதியுள் ளார் டாக்டர் கோகக். பல இலக்கிய மாநாடுகளைத் தலைமை தாங்கி நடத்தி யும் மாநில இந்திய அனைத்துலக கவிஞர் மாநாடுகளிலும் கல்வியரங்குகளிலும பங்கேற்று இலக்கியத் தொண்டாற்றி வரும அன்னாரின அருந்தொண்டைப் பாராட்டி மத்திய அரசாங்கம் 'பத்மபூரீ' பட்டமளித்துப் பெருமைப்படுத்தி யுள்ளது. கல்வி, இலக்கியத் தொண்டைத் தன் உயிர்மூச் சாகக் கொண்டு பணியாற்றிவரும் டாக்டர் கோகக் அவர் கள் பெங்களுர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப் பைத் துறந்த பின்னர் சமய ஆன்மீக தத்துவக் கருத்துக களைப் பரப்பத் தன் பேனவை மிக வலுவோடு பயன் படுத்தியவர்.