பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்ய ரங்காச்சாரியா தென்னக நாடகத்துறை வளர்ச்சிக்குக் கன்னட இலக் கிய உலகு ஆற்றியுள்ள கணிசமான ஆக்கப்பணியை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது அததகு சாதனையைக் கன்னட இலக்கியயுலகில் நிகழ்த்திய டி.வி. கைலாசம், ஹாயில்கோல் கருடாசம்ஸா போன்ற வர்களின் பட்டியலில் குறிப்பிடத்தக்க ஒருவர் நாடகப் பேராசிரியர் ஆத்ய ரங்காச்சாரியா அவர்கள் இவர் பெரும்பாலும் பூரீரங்கா என்ற புனைபெயராலேயே மக்களிடையே பிரபலமடைந்துள்ளார். பழமைப் போக்கை உடும்புப்பிடியாகக் பிடித்துக் கொண்டு கடுமையன ஆச்சார அனுஷ்டானங்களிலிருந்து இம்மியும் பிசகாது அவற்றைக் கண்டிப்போடு கடைப் பிடிக்கும் வைதீக பிராமண குலத்தில் பிறந்த ஆத்யாவோ பொருளற்ற 'கண்மூடிப் பழக்க வழக்கங்களும் பழமைப் போக்குகளும் மண்மூடிப்போகத் தொடக்க முதலே இடையறாது உழைக்கும் புரட்சி வாதியாவார். சமுதாயத்தில் உள்ள கோணல் நிலைகளை, மேடு பள்ளங்களைக் கதைப் போக்கில் பாத்திரப் படைப்புக் களின் வாயிலாகச் சுட்டிக் காட்டி அங்கதக் குறிப்போடு, நகைச்சுவை ததும்ப விளக்குவதில் தனித்திறமை பெற்ற வராக விளங்குபவர் ஆதயா. மூட நம்பிக்கைகளும் பொருளற்ற பழக்கவழக்கங்களும் எந்த அளவுக்கு சமூக நல்வாழ்வை சிதைத்துச் சின்னாபின்னமாக்கி அலைக் கழித்து வருகிறதென்பதை எண்ணிக் குழையும் உள்ளம் படைத்தவர். பழமை இருளிலே நின்று தடுமாறும் மக்களுக்கு உண்மை எனும் புதுமை ஒளி காட்டி அவர்