பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 களை வழிநடத்த உறுதுணை புரியும் வண்ணம் கதைக் கருவை அமைத்தே தம் நாடகங்களை உருவாக்கியுள்ளார் இனறைய உலகில் காணும் சாதாரண மனிதர்களையே பாத்திரமாகப் படைத்து விளக்குவதன் மூலம் மக்களுக் குப் பிரத்தியட்ச உண்மைகளை நேரடியாகவும் மறைமுக மாகவும் சுட்டிக்காட்டி அவர்களது மனப்போக்கில் மாபெரும் மாற்றங்களுக்கு விததிடுகிறார். புதுமை யுணர்வு கொப்பளித்து நிற்கும் இவரது சக்திமிக்க உரைநடையும் நாடகத்துறையில் இவர் கையாளும் புதிய உத்திகளும் நுணுக்கங்களும் இவரது புதுமை நோக்கம் இனிது நிறைவேற பெருந் துணைபுரிகின்றன. சமூகவாழ் வில் படிநதுள்ள பாசிகளை மட்டுமல்ல, அரசியல், பொருளியல், சமய, கல்வித் துறைகளின் மீது படிந்துள்ள மாசுகளையும், தூசிகளையும் அப்புறப் படுத்த இயனற அளவு தம எழுத்தின்மூலம் இடையறாது முயல்கிறார். சமூக அநீதிகளை மக்கள் முன தோலுரித்துக் காட்டுவதன் மூலம் அவர்களிடையே விழிப்பையும், புரட்சியுணர்வை தோற்றுவிக்கிறார். அநீதியை அகற்றி, நீதியை நிலை நாட்டுவதே இவரது நோக்கம் என்பதை இவரது படைப் புக்கள் அனைத்தும் பறைசாற்றுகினறன. கன்னட மாநிலத்திலுள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் அகர்கெடா என்ற குக்கிராமமொன்றில் அறுபத்தேழு ஆண்டுகட்டு முனபு வைதீக பிராமணக் குடுமய மொன றில் பிறந்த ஜாகிர்தாா (ஆம் அதுதான் அவரது பெற் றோர் ஆரம்பததில் அவருக்கு இட்ட இயற்பெயர்) கள்ளிப்படிப்பை முடித்து. பம்பாய் பல்கலைக் கழகததில் சமஸ்கிருதம் பயிணறு எம். ஏ. பட்டம் .ெ ப ற் றார் தொடர்ந்து உயர் கல்வி பெற மேனாடு சென்று திரும் பியபின் தார்வாரில் உள்ள கர்நாடகக் பல்லூரியில சமஸ் கிருதப் பேராசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். இச்சமயத்தில்தான் இவர் தம் இயற்பெயரான ஆர். வி. ஜாகிர்தார்' என்பதை மாற்றி "ஆத்யரங்காச்சாரியா"