பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

என அமைத்துக் கொண்டதோடு ரங்கா' என்ற புனைபெயரையும சூடடிக்கொண்டு தம் எழுத்துலகப் பணியைத் தொடங்கலானார்.

இயல்பாகவே சிந்தனைத்திறமும் புதுமையுணர்வும் தனித்துவப் போக்குமுடைய ஆத்யாவால் எவ்வித மாறு தலுக்கும் உட்படாத செக்குமாட்டுத் தன்மைகொண்ட ஆசிரியப் பணியை மேற்கொண்டு நீண்டகாலம நீடிக்க இயலவில்லை. அவரது உள்ளத்தின் அடித்தளத்தில் கனனறு கொண்டிருந்த புரட்சிக்கனல், சமூக சீர்திருத்த உணர்வு, அநீதியைக் காண சகிக்காத மனப்போக்கு ஆகியன எழுத்துலகை நோக்கி அவரை நடைபோட வைத்தன. எவ்விதக்கட்டுப்பாட்டுக்கும் உட்படாத சுதந்திர எழுததாளனாகத தம் வாழ்வைச் சிலகாலம் நடத்திவந்தார். தனி மனிதர்களிடையே காணும் குறை நிறைகளை நகைச்சுவையாகச் சுட்டிக்காட்டி கேலி செய் வதன மூலம சமூக மாற்றத்திற்கு வழிகுக்கும் பெர் னாட் ஷா, இப்சன ஆகிய மேனாட்டு புதுமை நாடகாசிரி யர்களின் போக்கும் எழுததுத் திறமையும் இவரைப் பெரிதும் கவர்ந்தன. அவர்கள் வகுத்துச் சென்ற தடயத் தைப்பின்பற்றித் தம் படைப்புக்களை உருவாக்கத தொடங்கினார். நாளடைவில் தனக்கெனத் தனியான தொரு பாணியையும் உத்தியையும கையாண்டு முழு நாடகங்களையும் ஒரங்க நாடகங்களையும கதை இலக் கியங்களையும் உருவாக்கினார். விரைவிலேயே அப் படைப்புக்கள மக்களிடையே விழிப்பையும் ஒருவிதப் பிடிப்பையும் ஏற்படுத்தின. முற்போக்கு இளைஞருக்கும் புதுமைப் போக்காளர்களும் இவரை புரட்சி நாடகாசிரி யராக ஏற்றிப் போற்றத் தொடங்கினர்.

தீண்டாமை எனும் பெரும் சமூகக் கொடுமையைத் தாக்கி, வைதீக மனப்பான்மை கொண்டவர்களைக் கடு மையாகக் சாடும் இவரது புதுமைப் படைப்பான "ஹரி