பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர். எஸ். முகளி இந்திய இலக்கிய உலகில் குறிப்பாகத் தெனனக இலக்கியத் துறையில் திறனாய்வுக்கலை அண்மைக் காலத்தில் வெகுவாக வளர்ந்து இலக்கிய வளர்ச்சிக்குப் புதிய வேகமும் விறுவிறுப்பும் தந்து வளமூட்டி வருகிறது புத்துலக இலக்கிய முயற்சிகளுக்கு உறுதுணை புரியவல்ல திறனாய்வுத்துறை தமிழ் மலையாள, தெலுங்கு மொழிப் பகுதிகளில் பெருவளர்சசி கணடுள்ளது போனறே கன்ன டப் பகுதியிலும் அழுந்தக் காலூனறிப் பெருமைப் படத் தக்க அளவில் வளமாக வளர்ந்துவருகிறது. கன்னட திற னாய்வுற் துறையின் இத்தகைய வளர்ச்சிக்குப் பெருந் துணையாயமைந்த கணனட இலக்கிய வாணர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் 'ஆர். எஸ். முகளி' எனறழைக் கப்படும் டாக்டர் ரங்கநாத பூரீநிவாச முகளி அவர்கள். டாக்டர் முகளி தலைசிறந்த திறனாய்வாளர் என்ப தோடு புகழ் பெற்ற கவிஞராக-புதினப் படைப்பாளராக வும் கன்னட இலக்கிய உலகில் பெரு மதிப்போடு போற் றப்படுகின்றார். 1906ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் வட கர்நாடகத்தி லுள்ள மலப்ரபா நதிக்கரையில் அமைந்துள்ள ஆலூர் என்ற ஊரில் பிறந்த முகளி தம் தொடக்கப்படிப்பை பீஜப்பூரிலும் கல்லூரிக் கல்வியை தார்வார் கர்நாடகக் கல்லூரியிலும் படித்து முடித்து சமஸ்கிருதத்தில் பி. ஏ. பட்டம் பெற்றார் 1930ஆம் ஆண்டில் எம் ஏ பட்டம் பெற்ற அவர் கிடைத்தற்கரியதான வித்யாரண்யா பதக்கமும் பெற்றார். 1932ஆம் ஆண்டில் ஆசிரியப் பயிற்சியை முடித்தபின் ஹாப்ளியிலுள்ள சங்கிலி எனு