பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 மிடத்தில் உள்ள வெலிங்டன கல்லூரியின் கன்னடப் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின் கல்லூ ரித தலைவராகப் பணியாற்றலானார். கல்லூரியில் கல்வி கற்றுவந்த காலத்திலேயே இவரது உள்ளத்தில கவித்துவ உணர்வு பொங்கி நின்றது இவரது உள்ளத்தே ஊற்றெடுத்து வந்த கவித்துவ உணர்வை செயலுருக் கொள்ளுமாறு மாற்றிய பெருமை கவிஞர் பேந்த்ரேயின கவிதைகளையே சாரும் அககாலத்தில் பல பெருங் கவிஞர்கள் உருவாகப் பெருங் காரண மாயமைந்த கெளயரகும்பு’ (Gelayaragumpu) என்ற கவிஞர் குழுவில் முகளி பெரும் பங்கேற்றார். கவிதை உணர்வால் பெரிதும் சூழப்பட்டிருந்ந போதி லும் நூல் வடிவில் முதன்முதலாக வெளிவந்த இலக்கியப் படைப்பு புதினமேயாகும் இவரது முதல புதினப் படைப் பான பாளுரி (வாழ்க்கைத் தி) வேலையினமைப் பிரச் சினைகளையும் அதனால் ஏற்படும் வறுமையையும் மைய மாகக் கொண்டு பின்னப்பட்டதாகும் 1939ஆம் ஆண்டில் அவரது இரணடாவது புதினம் காரண புருஷ வெளி வந்தது. இலட்சியத்துக்கும் நடைமுறைப் போககுக்கும் உள்ள இடைவெளியை விளக்குவது இப்புதினம் அவரது புதினங்கள் அனைத்தும் சமூக வாழ்க்கையில் இன்றியமை யாது இடம்பெற வேண்டிய உயரிய ஒழுக்கப் போக் கினை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளன. 1930ஆம் ஆண்டு முதலே இவர் கவிதை எழுதத் தொடங்கிய போதிலும் முதல் கவிதைத் தொகுதியான பாசிகா 1940ஆம் ஆண்டில்தான் வெளிவந்தது. உணர்ச்சிப் பெருக்கோடு இயற்கையழகினை வர்ணிக்கும் இக் கவிதைகளில் தத்துவக் கருத்துக்கள் பரக்க அமைந் துள்ளன. மனித சமுதாயத்தின்மீது இவருக்குள்ள மணி தாபிமான உணர்வுகளை அழகுற சித்தரிக்கும் பலபாக்கள்