பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ந. கிருஷ்ண ராவ் வரலாற்றுப் புதினப் படைப்புத் துறையில், தமிழ் இலக்கிய உலகில தனிவழி வகுத்துப் பெரும் புகழ்பெற்ற பேராசிரியர் 'கல்கி அவர்களைப் போன து கனனடத்தில் வரலாற்றுப் புதினப் படைப்புத் துறையில் தனிப்பெரும் எழுத்தாளராக விளங்குபவர் 'அ ந-க்ரு என அழைக்கப் படும் அ.ந. கிருஷ்ண ராவ் அவர்கள். இவரைப் பிறவி எழுததாளர் என்றே கூற வேண்டும். சிந்தனை தேங்கிய ஒளியுமிழ் கண்களும் கூரிய நாசியும். பரந்த நெற்றியும், கலைஞனுக்குரிய கவர்ச்சியான உருவ அமைப்பும் கொண்ட இவரைப் பார்தத மாத்திரத் திலேயே, எளளளவு ஐயத்திற்கும இடமினறி எவரும் இவரை "ஒர் எழுத்தாளர்' என முடிவு கட்டிவிடுவார் உருவத் தோற்றததால் மட்டுமல்லாது எழுத்தாற்றலாலும கன்னட இலககியத் துறையில் தனித்துவ நிலைபெற்றிருப் பவர் அ.ந. க்ரு அவர்கள். எழுத்தை மட்டுமே நம்பி வாழும் இவரளவுக்கு, கன்னட மொழியில் சளைக்காமல் எழுதிக் குவித்திருப் பவர் யாருமிலர். தமது பதினாறாவது வயதில் எழுதத் தொடங்கிய இவர் புதினம், சிறுகதை, நாடகம், திற னாயவு, வாழ்க்கை வரலாறறு நூல் என இருநூறுக்கு மேறபட்ட நூல்களை கன்னட இலக்கிய உலகுக்கு இயற்றித் தந்துள்ளார். வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தேடியெடுப்பதிலும், அவற்றை எளிதாகத் தம் படைப்பு வழி விளக்குவதிலும் அரிய ஆற்றல் வாய்க்கப் பெற்றவர் இவர்.