பக்கம்:இயந்திரவியல் கலைச்சொற்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
iv


பொறியியல் தொழில்நுட்பவியல் கலைச்சொற்பட்டியபல் ஒன்றை வெளியிட்டது. இதில், பொதுவியல், இயந்திரவியல், மின்னியல் துறைச் சொற்கள் (2794 சொற்கள்) இடம்பெற்றுள்ளன.

1982இல் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் நிகழ்த்தப்பெற்ற பொறியாளர் கருத்தரங்கு மற்றும் மருத்துவர் கருத்தரங்குகளைத் தொடர்ந்து கலைச்சொல்லாக்க முயற்சிகள் தொடங்கப் பெற்றன. பல்துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு கலைச்சொல்லாக்க நெறிமுறைகள், கலைச்சொல்லாக்க முயற்சிகள், பொறியியல் மருத்துவவியல், அறிவியல் கலைச்சொற்களின் பண்பாடு போன்றவை ஆராயப்பெற்றதன் விளைவாகத் துறைவாரியாகக் கலைச்சொற்களைத் தொகுக்கும் பணி இங்கு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வகையில் தொகுக்கப்பட்ட இயந்திரவியல், இயந்திரப் பொறியியல் கலைச்சொற்கள் (சுமார் 6000 கலைச்சொற்கள்) தொகுப்பு நூல் இப்பொழுது வெளியிடப்பெறுகின்றது.

இத்துறை தொடர்பான ஒரு குறிப்பிட்ட கலைச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பை இத்தொகுப்பு நல்குகிறது.

அறிவியல் கருத்துக்களைத் தமிழியே அளிக்க விழையும் ஆய்வாளர் மற்றும் மாணாக்கர்கள் அனைவருக்கும் இத்தொகுப்பு மிகவும் பயனுடையதாகும். இத்தகைய கலைச்சொல் தொகுதிகளை அச்சாக்கி வெளியிடுவதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் பெருமை கொள்கிறது.

இத்தொகுப்பிளை அரிதின் முயன்று தொகுத்து அளித்துள்ள பேராசிரியர் முனைவர் இராதா செல்லப்பன் அவர்களின் நன்முயற்சியைப் பாராட்டுகின்றேன். அறிவியல் தமிழ்த்துறை வளர்ச்சிக்கென உருவாக்கப் பெற்ற இக்கலைச்சொல் தொகுப்பு தமிழ்கூறு நல்லுலகத்தின் வரவேற்பைப்பெறும் என்று நம்புகின்றேன்.

இதளை உருவாக்கிய தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறையினருக்கும் இனிய பாராட்டுதல்கள்,

20 A-2002

இசுந்தரமூர்த்தி