பக்கம்:இயந்திரவியல் கலைச்சொற்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
vi


நூல்களும் அடங்கும். அவ்வாறு தொகுக்கும்போது ஒரே ஆங்கிலம் கலைச் சொய்விற்கு இணையாகப் பல தமிழ்க் கலைச்சொற்கள் பயன்படுத்தப்பெற்றுள்ளது கண்டறியப்பட்டது. ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக ஐந்து தமிழ்க் கலைச்சொற்கள் வரையிலும் பயன்படுத்தப்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டது. இவ்வகையான கலைச்சொல் வேறுபாடு ஒரே நூலில் கூட இடம்பெற்றது. காட்டாக, alloy என்பதற்குக் கலப்பு உலோகம், கலவை உலோகம், உலோகக் கலவை ஆகிய கலைச்சொற்கள் ஒரே நூலில் இடம் பெற்றுள்ளன. இத்தமிழ்க் கலைச்சொற்கள் மூல நூல்களில் இடம்பெற்றுள்ளவாறே இத்தொகுப்பிலும் தரப்படுகின்றன. அவற்றில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரே தமிழ்க் கலைச்சொல் ஒன்றிற்கு மேற்பட்ட தொகுதிகளிலோ நூல்களிலோ இடம் பெற்றால் அந்த நூல்களின் எண்கள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன. காட்டாக, bearing என்பதற்கு இணையாகத் தாங்கி என்ற கலைச்சொல் பல தொகுதிகளிலும் காணப்படுகின்றது. எனவே தாங்க என்ற சொல்லிற்குப் பக்கத்தில் அடைப்புக்குறிக்குள் (1, 4, 5. 8, 11, 29) ஆகிய எண்கள் தரப்பட்டுள்ளன. இவ்வெண்கள் அந்தந்த மூல நூல்களைக் குறிக்கும். கலைச்சொற்களைத் தரப்படுத்தும் பணி இந்தத் தொகுப்பில் மேற்கொள்ளப்படவில்லை அறிவியல் நூல்கள் மற்றும் கட்டுரை படைப்போர் தாம் கூறவந்த கருத்தினைத் தாங்கி நிற்கும் கலைச்சொல்லைத் தேர்வு செய்ய இந்தத் தொகுப்பு உதவ வேண்டும் என்ற நோக்கில் கலைச்சொற்கள் தொகுக்கப்பெற்றுள்ளன.

தமிழ்க் கலைச்சொற்களை ஆய்வு செய்தபோது அறிவியல் ஆசிரியர்களின் பக்வேறு கலைச்சொல்லாக்கக் கொள்கைகள் வெளிப்பட்டன. சில ஆசிரியர்கள் வழக்குச் சொல்லுக்கு முதன்மை கொடுக்க மற்று சிலரோ மொழிபெயர்ப்புச் சொல்லை வழங்கினர்.

pigiron ; பன்றியிரும்பு (2) தேனிரும்பு (1)

ஒலிபெயர்ப்புச் சொல்லை ஒரு சாராரும் மொழிபெயர்ப்புச் சொல்யை மற்றொரு சாராரும் பயன்படுத்தியுள்ளனர்.