பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7. பசு - (ஒருமை பன்மை இது ஒரு பசு. என் வீட்டில் ஒரு பசு இருக்கிறது. அவன் வீட்டில் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. இடையன் வீட்டில் பல பசுக்கள் இருக்கின்றன. அதோ ஒரு பசு வருகிறது. அதற்குப் பின்னால் சில ஆடுகள் வருகின்றன. சாயந்திரத்தில் பசுமந்தை வருகிறது. பசுவுக்குக் கொம்புகள் இருக்கின்றன. கால்களில் குளம்புகள் உண்டு. குளம்புகள் பிளவுபட்டிருக்கும். கொம்புள்ள மிருகங்களுக்கும் குளம்புகள் பிளவு பட்டிருக்கும்.