பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பருந்து - நீ பருந்து பார்த்திருக்கியா அது மாமிசம் தின்னும் பக்ஷிகளில் ஒன்று அதன் முக்கு நுனி யில் கூராய் வனேந்திருக்கும். அதன் கால் நகங் கள் கூராய் இருக்கும். பருந்து ஆகாயத்தில் அதிக உயரம் பறக்கும் அது மேலே பறந்து போகும் போதும், கீழே இறங்கி வரும்போதும் வட்டமிட்டு வட்டமிட் இப் பறக்கும். தரையில் கோழிக்குஞ்சு, தவளை முதலிய சிறு பிராணிகளைக் கண்டால், பருந்து ஒரே பாய்ச்சவாய்ப் பாய்ந்து அவற்றைத் தாக்கிக்கொண்டு போய்விடும். தண்ணிருக்கு மேலே வரும் மீன் களையும் கொத்திக்கொண்டு போய்விடும்