பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(47 21. சந்திரனும் நக்ஷத்திரங்களும். சூரியன் மறைவதை அஸ்தமிக்கிறது என்று சொல்வார்கள். சூரியன் கிழக்கே உதித்து மேற்கே அஸ்தமிக்கும். ' சூரியன் அஸ்தமிக்கும்போது சிவப்பு நிறமாய்க் காணப்படும். அப்போது பலி கள் தங்கள் தங்கள் கூடுகளில் போய் அடங்கும். சூரியன் மறைந்த பிறகு எங்கும் இருட்டிவிடும். அப்பொழுது இரவு வந்துவிட்டதென்று சொல் கிருேம். இரவில் ஆகாயத்தில் தவுத்திரங்கள் பிரகாசிக்கிறதைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா தகூத்திரங்கள் பூமியை விடப் பெரியவை அதிக காரத்தில் இருப்பதால் நம் கண்ணுக்குச் சிறியவைகளாய்த் தோற்றுகின்றன. சந்திரன் தமக்குப் பெரிதாகத் தோற்றுகிறது. ஆனால் அது தாத்திரங்களை விடச் சிறியதுதான். நக்ஷத்திரங். களைவிடச் சமீபத்தில் இருப்பதால் தமக்கு அது பெரிதாய்த் தோற்றுகிறது சந்திரன் வட்ட வடிவமானது. ஆனால் எப்பொழுதும் ஒரே வடிவமாய்க் காணப்படுவதில்லை. சற்றேறக்குறைய முப்பது நாளைக்கு ஒருகரம் அது பூரணமான வட்ட வடிவமாய்க் காணப்படும். அந்த நாளுக்குப் பௌர்ணமி என்று பெயர்.