பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23. நாயும் நிழலும்.

இராகம், இந்துஸ்தான் நாபி]

[ரூபகதாளம்

பல்லவி

நாயின்பே ராசைதன்னை
நன்றாய்ச் சொல்லுவேன் - கேளும்.

அநுபல்லவி

பாயும் ஆட்டின் மாமிசம் வாயாற் கௌவியே
பாங்காகவே தின்னத் தான் கொண்டுபோகும். ()

சரணங்கள்.

1. போகும் வழியில் ஓர் ஓடையிதேது
புதியதென்று தான் எட்டிப் பார்த்தபோது தன்
தேகம் ஜலத்தில் காணக் கோபங்கொண்டந்தச்
செந்நாயைக் கவ்வ வாய் திறந்தேமாத்த (நா)