பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(61) 29. பறக்கும் பூச்சிகள்.

பறக்கும் பூச்சிகளில் பலவகை உண்டு. அவை கள் மாம் செடிகள் உள்ள இடத்தில்தான் அதிகமாய் இருக்கும். அவைகளை வண்ணாப் பூச்சி என்றும் தட்டாரப் பூச்சி என்றும் சொல்லதுண்டு . இந்தப் பூச்சிகள் பல வர்ணங்கள் உடை யன. பார்ப்பதற்கு அழகாயிருக்கும். எந்தப் பூச்சி எந்தப் பூவில் வசிக்கிறதோ, அந்தப் பூச்சி அந்தப் பூவின் நிறமாகவே இருக்கும். அதனால் அது தனக்கு விரோதமான பிராணிகளின் கண்ணுக்கு அகப்படாமல் தப்பித்துக்கொள்கிறது. பெரிய பூச்சிகள் மரங்களின் இலைகளின் மேல் முட்டையிடும். ஒரு பூச்சி ஒரேதடவை வில் பல முட்டைகள் இடும். முட்டை இட்டவடனே சில தாய்ப்பூச்சிகள் இறந்துவிடும். சூரியவெப்பத்தினால் சூடேறிய பிறகு முட்டைகள் வெடிக்கும் அப்போதுதான் குஞ்சுகள் வெளிப் படும் முட்டையிலிருந்து வெளிவரும்போது அவை. களுக்குச் சிறகு இராது அப்போது அவைகளக் கம்பளிப்பூச்சி என்று சொல்வார்கள், தாளாக நாளாக அவைகள் பெரியவைகளாகும் பிறகு அவைகளுக்குச் சிறகு உண்டாகும். அதன் பிறகுதான் அவைகள் பறக்கக்கூடும்.