பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(63)

16. தற்பமொன்றும் பாராட்டித்
திரிய வேண்டாம்.
17. கொலைகளவு செய்வாரோ
டிணங்க வேண்டாம்
18. கற்றவரை ஒருநாளும்
பழிக்க வேண்டாம்
19. வார்த்தைசொல்வார் வாய்பார்த்துத்
திரிய வேண்டாம்..
20. முத்தோர் சொல் வார்த்தைகளை
மறக்க வேண்டாம்.)
21. முன்கோபக் காரோ
டிணங்க வேண்டாம்
22. எளியாரை எதிரிட்டுக்
கொள்ள வேண்டாம்
23. சேராத இடந்தனிலே
சேர வேண்டாம்.
24. செய்ததன்றி ஒருாளும்
மறக்க வேண்டாம்.
25. உற்றாரை உதாசினங்கள்
சொல்ல வேண்டாம்
26, புறஞ்சொல்லித் திரிவாரோ
டிணங்க வேண்டாம்
27. வாதாடி வழக்கழிவு
சொல்ல வேண்டாம்.
28) தெய்வத்தை ஒருநாளும்
மறக்க வேண்டாம்.
29 இறத்தாலும் பொய்தன்னைச்
சொல்ல வேண்டாம்.
30. நிறம் பேசிக் கலகமிட்டுத்
திரிய வேண்டாம்