பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

7


களுடன் பாடிக்கொண்டும், கைகால்-தலை ஆகியவற்றை அசைத்து ஆடிக்கொண்டும் சொற்பொழிவு செய்வதைக் காணலாம். எனவே, இயல் தமிழ் மற்ற இரண்டு தமிழ்க் கூறுகளிலும் ஊடுருவி இரண்டறக் கலந்துள்ளது என்பது புலனாகும்.

பொதுமக்கள் கூத்தையும் இசையையும் சுவைக்கும் அளவுக்கு, ஆடல் பாடல் இல்லாமல் விளக்கப்படுகின்ற இயல் தமிழாகிய இலக்கிய-இலக்கணங்களைச் சுவைப்பது குறைவுதான்.

உரைநடை எழுதப்படாத பண்டைக் காலத்தில், எழுதப்பட்டுள்ள இலக்கியங்களில் உள்ள பாட்டுகள், இன்றும் இசையுடன் பாடிக் காட்டி வகுப்புகளில் விளக்கப்படுவதை அறியலாம். பாடுவதே பாட்டு. எனவே, எல்லா இலக்கிய வகைப் பாடல்களுமே, கருத்துக்கு ஏற்ற மெய்ப் பாடுகளுடனும்-அதாவது-உறுப்புகளின் அசைவுடனும் உரிய இசையுடனும் பாடப்பட்டன என்பது புலனாகலாம். பாட்டுகளுக்குக் கருத்துக்கு ஏற்ற இசை அமைக்கப்பட்டதும் ஈண்டு எண்ணத்தக்கது.

பண்டு, பாட்டு எழுதிய அளவுக்கு உரைநடை இல்லை. பாடல்களை விளக்கும் உரை (நடை)களே இருந்தன. பிற்காலத்தில்-அதாவது-கடந்த இரண்டு நூற்றாண்டு காலமாகத் தமிழில் உரைநடை நூல்கள் எழுதப்படலாயின. இந்த உரைநடைகளும் இலக்கியம் என்னும் பெயரில் படித்துச் சுவைக்கப்படுகின்றன. உரைநடையில், புதினம் எனப்படும் தொடர் கதைகள் இப்போது பெற்றிருக்கும் இடம் மிகுதி.

‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என்னும் முன்னோர் மொழிப்படி இலக்கணம் எழுந்தது. வாழ்க்கைக்கு வழிகாட்ட எழுந்த அறநூல்களைப் போல,