பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

சுந்தர சண்முகனார்


மாவட்டத்தை அடுத்துள்ள சென்னையில் நெடுங்காலம் தங்கியிருந்ததால், செங்கற்பட்டு மாவட்டப் புதுச்சேரியை அறிந்திருக்கலாம். அது வடக்கேயிருப்பதால் புதுச்சேரி மாநிலப் புதுச்சேரியைத் தென் புதுவை எனக் குறிப்பிட்டிருக்கலாம். இல்லையேல், தென் புதுவை என்பதற்கு அழகிய-இனிய புதுவை என்று பொருள் கூறுவதைத் தவிர வேறு வழியில்லை.

7. இனச் சுட்டு இன்மை

இங்கே தொல்காப்பியரும் நன்னூலாரும் அறிவித்துள்ள ஒரு கருத்து உள்ளத்தை உறுத்தாமல் இல்லை. தொல்காப்பியர் கிளவியாக்கத்தில்,

“இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்கொடை
வழக்கா றல்ல செய்யு ளாறே” (18)

எனவும் பவணந்தியார் நன்னூல் பொதுவியலில்

“பொருள்முத லாறாம் அடைசேர் மொழியினம்
உள்ளவும் இல்லவும் ஆம் இரு வழக்கினும்” (50)

“அடை மொழி இனமல்லதும் தரும் ஆண்டுறின்” (51)

எனவும் கூறியுள்ளபடி நோக்கின், தென் புதுவை என்பதிலுள்ள ‘தென்’ என்பதை, இனச் சுட்டு இல்லாப் பண்பாக-இனச்சுட்டில்லா அடையாகக் கொள்ளலாம்.

ஆனால் இந்தக் கருத்து எனக்கு மனநிறைவு அளிக்கவில்லை. ஒருகால், இடப் பெயர்கள் அல்லாத வேறு பெயர்கட்கு முன் உள்ள பண்பு - அடைமொழிகள் இனச்சுட்டு இல்லாதனவாயிருக்கலாம். இடம் தொடர்பான பெயர்கட்கு முன்னால் வரும் திசைப் பெயர்களை இனச்சுட்டு உள்ள பெயர்களாகவே கொள்ளல் வேண்டும்.

தொல்காப்பியரையும் பவணந்தியாரையும் யான் மறுக்கிறேன். இனச்சுட்டு இல்லாத பண்புகளே - இனச்சுட்டு