பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

109



(And happy melodist, unwearied,
For ever pipping songs for ever new)

எவ்வளவு மகிழ்ச்சியான காதல் - எவ்வளவு மகிழ்ச்சியான காதல்! காதலர்கள் என்றும் இளமையுடன் இருந்து குளிர்ந்த {Warm - வெதுப்பான) காதல் சுவையை நுகர்ந்து கொண்டேயிருப்பர்; துன்பமின்றித் தெவிட்டாமல் காதலிப்பர்.”

(More happy love!
more happy, happy love!
For ever warm
and still to be enjoyed,
For ever panting
and for ever young)

காட்சிகளைக் கண்டவன் இவ்வாறு கூறினான். அவன் இவ்வாறு கூறுவதற்கு ஏற்ப, என்றும் ஒரே மாதிரியாயிருந்த அந்தக் காட்சிகள் யாவை?

ஒரு கிரேக்கப் பாணியில் செய்யப்பட்ட ஒரு சாலின் பெரிய கொள்கலத்தின்) மேலே சுற்றி வரையப்பட்டுள்ள ஓவியங்களைப் பார்த்தே அவன் இவ்வாறு கூறினான். ஓவியத்தில் வரையப்பட்டவை, நிலை மாறாமல் என்றும் ஒரே அமைதி நிலையில் இருக்கும் அல்லவா?

ஒன்யான் சுவைகளுள் அமைதி

நகை (சிரிப்பு), அழுகை, இளிவரல் (இழிவு), மருட்கை (வியப்பு), அச்சம், பெருமிதம் (வீரம்), வெகுளி (சினம்), உவகை (காமம்), அமைதி (சாந்தம்) என்பன ஒன்பது சுவைகள் (நவரசங்கள்) ஆகும். அமைதி என்பது, இன்பம் வரினும் துன்பம் வரினும், நிலை மாறாமல் என்றும் ஒரே நிலையில் இருப்பதாகும். இவ்வாறு பொது மக்கள்