பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

சுந்தர சண்முகனார்


“மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
சுட்டி ஒருவர் பெயர் சொளப் பெறாஅர் (54)

என்னும் நூற்பாவின் உரையில், சுட்டி ஒருவர் பெயர் கொண்ட கைக்கிளைக்கு எடுத்துக்காட்டாக, நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியர் ஆசிரிய இராமாயணப் பாடல் ஒன்றைத் தந்துள்ளார். அதன் கருத்தாவது:

விசுவாமித்திர முனிவர் காட்டில் தமது வேள்வியைக் காப்பாற்றிய இராமனோடு மிதிலைக்குச் சென்றிருந்த போது இராமன் சனகனது வில்லை நாணேற்றி முறித்தான். முதலிலேயே இராமனைக் கண்டு அவனிடம் தன் உள்ளத்தைச் செலுத்திய சீதை, மிக்க விசையுடன் நாணேற்றி வில்லை ஒடித்த இடி போன்ற ஒலியைக் கேட்டு, இடியே றுண்ட பாம்புபோல் வாட்டம் எய்திப் படுக்கையிலிருந்து எழுந்து, வில்லை ஒடித்தவர் நாம் முன்பு கண்ட இளைஞராக (இராமனாக) இருப்பாரோ-அல்லது வேறு யாராகவாவது இருப்பாரோ என்று மயங்கினாள் பாடல்

“ஆள்வினை முடித்த அருந்தவ முனிவன்
வேள்வி போற்றிய இராம னவனொடு
மிதிலை மூதூர் எய்திய ஞான்றை
மதியுடம் பட்ட மலர்க்கண் சீதை
கடுவிசை வில்ஞாண் இடியொலி கேளாக்
கேட்ட பாம்பின் வாட்டம் எய்தித்
துயிலெழுந்து மயங்கினள் அதா அன்று மயிலென
மகிழ்...”

என்பது பாடல் பகுதி. இப்பாடல், புறத்திரட்டு என்னும் தொகை நூலில் சேர்த்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலும் முழுமையாகத் தரப்படவில்லை. நீல மாலை என்னும் தோழி சீதையின் ஆவலைத் தூண்டிப்