பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

119


விரும்பிக் கற்கும் முறையில் கல்வியில் முன்னேற்றம் கண்டிருப்பதாக இக்காலத்தவர் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். இவ்வளர்ச்சியை நோக்க, அக்காலக் கல்வி முறை பின்தங்கிய நிலையிலா - அல்லது வளர்ச்சி பெற்ற நிலையிலா - அல்லது வேறு எந்த நில்ையில் இருந்தது என்பதைக் காண்போம்.

அக்காலக் கல்வி முறை

அக்காலத்தில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்புவதே பெரிய விழாவாக அவரவர்களின் குடும்ப நிலைக்குத் தக்கபடி கொண்டாடப்பட்டது. அந்த எழுத்தறிவிக்கும் விழாவை (அட்சராப்பியாசத்தை) இன்று எங்கே காண முடிகிறது? மேய்ப்பவனிடம் ஆடு மாடுகளை ஓட்டி விடுவதைப் போல வல்லவா இன்றைய பள்ளிப் பயிற்சி அமைந்து விட்டது? அன்றைய மாணவர்கட்கு இப்பொழுதிருக்கும் உரிமையும் கிடையாது - சோம்பலும் கிடையாது. மாணவர்கள் வைகறையிலேயே பள்ளிக்குச் சென்றுவிட வேண்டும். முதலில் வந்தவனுக்கு ஓரடி; இரண்டாவது வந்தவனுக்கு இரண்டடி. இப்படி அடிகளின் எண்ணிக்கை ஏறும். இதற்குப் ‘படியடி’ என்று பெயராம். இந்த அடி உடல் வருத்தும் அடியன்று; காலந் தவறாமையைக் கற்பிக்கும் மெல்லிய இனிய அடி. நண்பகல் உணவிற்கே மாணவர்கள் வீடு செல்ல அனுப்பப்பட்டனர். மற்ற நேரம் ஆசிரியர் வீட்டில்தான். ‘குருகுல’ முறையில் ஆசிரியருடனேயே உண்டு உறைந்து கற்றதும் உண்டு. ஆனால், இத்தகு குரு குலங்களில், இக்கால மாணவர் விடுதிகளில் காணப்படும் ‘சிகரெட்’ புகை மண்டலத்தைக் கண்டிருக்கமுடியாது.

அன்றைய ஆசிரியர் ஒவ்வொருவரும் பல்கலை வல்லுநராக இருந்தனர்; கணிதம், வானியல், சோதிடம்,