பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

சுந்தர சண்முகனார்


இலக்கியம், இலக்கணம், முதலியவற்றில் புலமை பெற்றிருந்தனர். இன்றைய ஆசிரியர்களைப்போல் அடிப்படைக் கல்வியைப் பொதுப்படையாகக் கற்றவர்கள் அல்லர். மணிக்கு ஓர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் என்ற நிலை அன்று இருக்கவில்லை. மளிகைக் கடையில் வேலை பார்ப்பவர்கள், வாங்க வருபவர்கட்குப் பொருள் கொடுக்கின்றனர். அதற்காகக் கடை முதலாளி அவர்கட்குச் சம்பளம் கொடுக்கின்றார். இந்த மளிகைக் கடைக்கும் பள்ளிக்கூடங்கட்கும் என்ன வேறுபாடு இருக்கப் போகின்றது? அக்கால முறை இதைப் போன்ற தன்று. மாணவர்களைப்பற்றிய எல்லாவற்றிற்கும் ஆசிரியரே பொறுப்பாளி. அவர்களின் வாழ்வு, தாழ்வு எல்லாவற்றிற்குமே ஆசிரியர் நேரடிப் பொறுப்பாளியாவார். மாணவர்களும் அவர்களுக்கு வேண்டிய தானியம் காய்கறிகள் (எண்ணெய், எருமுட்டை முதற்கொண்டு) அனைத்தையும் கொடுத்துதவினர்.

பள்ளிக்கூடம், திண்ணை, மரத்தடி முதலிய விடங்களில் நடத்தப்பட்டது. இப்பொழுது பள்ளியின் அமைப்பு, இப்படி இப்படி இருக்க வேண்டும்; அப்படி இருந்தால்தான் தொடங்குவதற்கு ஒப்புதல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வரையறையும் கண்டிப்பும் அக்காலத்தில் இல்லை. இந்த வறட்டு முறையில் நம் ஏழை நாடு பின் தங்கியதால் மீண்டும் மரத்தடிக்கே வரத் தொடங்கிவிட்டது. தமிழன் முறையில் இயங்கும் தாகூரின் “விசுவ பாரதி” தலை நிமிர்ந்து நிற்கின்றது.

எழுத்தறிவித்தவன் இறைவன்

மற்றும், இக்காலத்தில் மாணவரிடம் வலிந்து புகுத்த வேண்டிய நிலையில் உள்ள சில நல்ல முறைகள் அக்காலத்தில் இயற்கையாகவே அமைந்திருந்தன. எடுத்துக் காட்டாக, இக்காலத்தில் பிள்ளைகள் நாட்டுக்கேற்ற