பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

129


குறிப்பு:- இந்தக் கருத்து, 1982ஆம் ஆண்டு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், “இலக்கியமும் வரலாறும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், கட்டுரையாசிரியர் பேசிய கருத்துக்களுள் ஒன்றாகும். 

18 நிகழ்வது தழீஇய எச்ச உம்மை

காலம் மூவகைப்படும்; அவை: இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்பன - என இலக்கண நூலாசிரியர்கள் கூறியுள்ளனர். தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - வினையியலில்

“காலம் தாமே மூன்றென மொழிப” (2)

“இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம்முக் காலமும் குறிப் பொடும் கொள்ளும்
மெய்ந் நிலை யுடைய தோன்ற லாறே” (3)

எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.

உரைகள்

தெய்வச் சிலையார்:- மேற்சொல்லப்பட்ட காலத்தின் பாகுபாடாகிய இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அம் முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும் பொருள் நிலைமையை உடைய தோன்று நெறிக்கண்.

இளம்பூரணர்:- காலம் மூன்றாவன இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்பதூஉம், வெளிப்படக் காலம் விளங்காதன குறிப்பு வினை என்பதூஉம் பெற்றாம்.

(வ-று) உண்டான், உண்ணா நின்றான், உண்பான் எனவரும்.