பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

சுந்தர சண்முகனார்



இறப்பாவது, தொழிலது கழிவு; நிகழ்வாவது, தொழில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத நிலைமை; எதிர்வாவது தொழில் பிறாவமை.

சேனாவரையர்:- இளம்பூரணர் கூறியுள்ள அனைத்தையும் கூறி, மேற்கொண்டு தொடர்ந்து சேனாவரையர் கூறியிருப்பது:- தொழிலாவது பொருளினது புடை பெயர்ச்சியாகலின், அஃது ஒரு கணம் நிற்பதல்லது இரண்டு கணம் நில்லாமையின், நிகழ்ச்சி என்பதொன்று அதற்கு இல்லையாயினும், உண்டல்-தின்றல் எனப் பஃறொழில் (பல்தொழில்) தொகுதியை ஒரு தொழிலாகக் கோடலின் உண்ணா நின்றான் - வாரா நின்றான் என நிகழ்ச்சியும் உடைத்தாயிற்று என்பது.

இனி நன்னூல் சொல்லதிகாரம் - பொதுவியலில் காலம் பற்றிப் பவணந்தியார் கூறியுள்ள நூற்பா வருமாறு:

“இறப்பு எதிர்வு நிகழ்வு எனக் காலம் மூன்றே” (31)

உரைகள்

மயிலைநாதர் உரை:- போவதும் வருவதும் நிகழ்வதும் என்று காலம் மூவகைப்படும்.

இறப்பு, நிகழ்வு, எதிர்வு என முறையின் கூறாராயது, காலம் என ஒரு பொருள் இல்லை என்பாரும், நிகழ்காலம் ஒன்றுமே என்பாரும், இறந்ததூஉம் எதிர்வுதூஉம் என இரண்டு என்பாரும், இறப்பு நிகழ்வு எதிர்வு என மூன்றென்பாருமான இப்பகுதியார், ஆசிரியர் அவருள் காலம் இல்லை என்பார், ஒரு பொருள் நிகழுமிடத்துப் பொருண்மைப் பேறல்லது காலம் என்று வேற்றுணர்வும் பிறவும் படுவதில்லை என்ப. இனி, காலம் ஒன்றென்பார், யாறொழுகும் - மலை நிற்கும் என உள்பொருள் ஒரு காலத்தானே சொல்லப்படும் பிறிதில்லையென்ப. இறப்பும் எதிர்வும் என இரண்டு