பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

சுந்தர சண்முகனார்


பவணந்தியார் ஆகியோர்க்கு உடன்பாடு என்பது தெரிய வருகிறது.

ஆனால், உரையாசிரியர்களின் உரைக் குறிப்புகளால் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. காலம் என ஒன்று இல்லை என்பது சிலர் கருத்து. காலம் என ஒன்று இருப்பதாகக் கொள்ளினும் நிகழ் காலம் ஒன்று மட்டுமே உள்ளது என்பது வேறு சிலரின் கொள்கை! நிகழ் காலம் என்பது இல்லை-இறந்த காலம், எதிர் காலம் என்னும் இரண்டு மட்டுமே உள்ளன என்பது மற்றொரு சாராரின் கோட்பாடு. அந்த அந்தக் கொள்கைக்குக் கூறப்படும் காரணங்களையும் உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாம் அவற்றைச் சிறிது விவரமாகக் காண்பாம்.

நம் நாட்டு அறிஞர்களைப் போலவே, ஐன்ஸ்டின் போன்ற அயல் நாட்டு அறிஞர்களும் காலக் கோட்பாட்டில் மாறுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

காலம் என ஒன்று இல்லை என்னும் கருத்து எனக்கும் உடன்பாடே, அப்படியெனில், ‘நிகழ்வது தழீஇய எச்ச உம்மை’ என்னும் தலைப்பை எவ்வாறு கட்டுரைத் தலைப்பாய் எடுத்துக் கொண்டாய்? என்னும் வினா எழும். படிப்படியாக மேலே செல்வோம்.

இடம் என ஒரு பொருள் இல்லாதது போலவே, காலம் எனவும் ஒரு பொருள் இல்லை. இரண்டும் சூழ்நிலைகளால் வரையறுக்கப் படுகின்றன. வெட்ட வெளியில் வீடு கட்டிக் கொண்டு இது இன்னார் வீடு-அது அன்னார் வீடு எனச் சூழ்நிலையால் நாமே வகுத்துக் கொள்கிறோம். குறிப்பிட்ட சில எல்லைகளை அமைத்துக் கொண்டு, இது வரையும் இந்த மாவட்டம்-இந்த மாநிலம்-இந்த நாடு எனவும், இவற்றிற்கு அப்புறம் உள்ளவை அந்த மாவட்டம்-அந்த